ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இன்று கரையை கடக்கும் மாண்டஸ் புயல்.. 8 மாவட்டங்களில் அதிகனமழை கொட்டும் - வானிலை மையம் அலெர்ட்

இன்று கரையை கடக்கும் மாண்டஸ் புயல்.. 8 மாவட்டங்களில் அதிகனமழை கொட்டும் - வானிலை மையம் அலெர்ட்

வலுவடைந்த மாண்டஸ்.. அதிதீவிர புயலாக கரையை கடக்கும்

வலுவடைந்த மாண்டஸ்.. அதிதீவிர புயலாக கரையை கடக்கும்

Cyclone Mandous | திருவள்ளூர், சென்னை, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வங்க கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் இன்று புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே கடக்க உள்ளதால் தமிகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிககனமழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.

மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. மாண்டஸ் புயல் தற்போது சென்னை தென்கிழக்கே 350 கி.மீ தொலைவில் உள்ளது. தற்போது 12 கி.மீ வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இன்று (டிசம்பர் 09) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், திருவள்ளூர், சென்னை, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்., தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாளை (டிசம்பர் 10) திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். விழுப்புரம், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

First published:

Tags: Cyclone Mandous, Weather News in Tamil