வங்ககடலில் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல் மணிக்கு 14 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது புயல் கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளது. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் புதுச்சேரி -ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரத்தில் இன்று நள்ளிரவு கரையை கடந்து செல்லும்.
இந்த நேரத்தில் நாம் மட்டும் பாதுகாப்பாக இருந்தால்போதாது நம்முடைய வாகனங்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். புயல் நேரத்தில், மரத்தின் அடியில் கார்கள், இருசக்கர வாகனங்களை நிறுத்த வேண்டாம். ஏனென்றால் காற்றின் வேகம் காரணமாக மரங்கள் வேருடன் சாயவோ அல்லது மரத்தின் கிளைகள் முறிந்து விழவோ வாய்ப்புள்ளது. இதனால் மரத்தின் கீழ் உள்ள வாகனங்கள் பலத்த சேதம் ஏற்படும்.
இதையும் படிங்க : மாண்டஸ் புயல்: சென்னையில் பவர் கட் உண்டா? அமைச்சர் சொன்ன முக்கியத் தகவல்!
இந்த நிலையில் புயல் காற்றின்போது நாம் என்னென்ன செய்ய கூடாது என்பதை பார்போம்...
1.புயல் மற்றும் கனமழை நேரங்களில் பழைய கட்டடங்கள் மற்றும் மரங்களின் கீழே நிற்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
2. புயல் கடக்கும் நேரத்தில் கட்டடங்களின் மொட்டை மாடிகளில் நிற்பதை தவிர்க்க வேண்டும்.
3. புயல் கரையைக் கடக்க உள்ள நிலையில், பொது மக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cyclone, Cyclone Mandous