ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

புயல் வரலாறு: 121 ஆண்டுகள்.. சென்னை-புதுவை இடையே கரையை கடந்த 13வது புயல் மாண்டஸ்..!

புயல் வரலாறு: 121 ஆண்டுகள்.. சென்னை-புதுவை இடையே கரையை கடந்த 13வது புயல் மாண்டஸ்..!

மாண்டஸ்

மாண்டஸ்

கடந்த 121 ஆண்டுகளில், சென்னை - புதுச்சேரி இடையே கரையை கடக்கும் 13 வது புயல் மாண்டஸ் என்று சென்னை வானிலை இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மாண்டஸ் புயல் புதுச்சேரி -ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடந்து வருகிறது.

இந்நிலையில் தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதியில் இதுவரை பல புயல்கள் கடந்திருந்தாலும், கடந்த 121 ஆண்டுகளில், சென்னை - புதுச்சேரி இடையே கரையை கடக்கும் 13 வது புயல் மாண்டஸ் என்று சென்னை வானிலை இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்போது, கடந்த 1891 முதல் 2021 வரை 12 புயல்கள் சென்னைக்கும் புதுவைக்கும் இடையில் கடந்துள்ளது. மாண்டஸ் புயல் இன்று மாமல்லபுரத்தில் கடக்கும் நிலையில், இது சென்னைக்கும் புதுவைக்கும் இடையில் கடக்கும் 13ஆவது புயலாக இருக்கும் என தெரிவித்தார்.

First published:

Tags: Chennai rains, Cyclone Mandous, Tamil Nadu Rain, Weather News in Tamil