ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மிரட்டும் மாண்டஸ்.. புயல் எங்க இருக்குன்னு லைவ்-ல பார்க்கணுமா?

மிரட்டும் மாண்டஸ்.. புயல் எங்க இருக்குன்னு லைவ்-ல பார்க்கணுமா?

விண்டி இணையதளம்

விண்டி இணையதளம்

உலக அளவில் உள்ள அனைத்து புயல்களையும் மிக துல்லியமாக விண்டி தளத்தில் பார்த்து நம்மால் தெரிந்து கொள்ள முடியும்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கக்கூடிய மாண்டஸ் புயல் தற்போது சென்னையிலிருந்து 160 கி.மீ தொலைவில் உள்ளது. இது தற்போது 14 கி.மீ வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. மாண்டஸ் புயல் புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரத்தில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை கரையை கடக்கும் கடக்கிறது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 80 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் இப்போது எங்கே இருக்கிறது. அது எப்போது கரையை கடக்கும் என்பதை windy தளத்தில் லைவாக பார்க்கலாம். புயலின் தற்போதைய நிலையையும், இனி வரும் காலங்களின் நிலையையும் நேரலையாக காணலாம். குறிப்பாக நேரம் அல்லது தினத்தை தேர்ந்தெடுத்தால் அந்த நேரத்தில் புயல் எங்கு இருக்கும் என்பதையையும் தெளிவாக பார்க்கமுடியும்.

மாண்டஸ் புயல் எங்கு மையம் கொண்டுள்ளது என பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

அது மட்டும் இல்லாம் உலகத்தில் எங்கு புயல் உருவானலும் இந்த தளத்தில் நம்மால் பார்க்க முடியும் அது மட்டும் இல்லாமல். உலக அளவில் உள்ள அனைத்து புயல்களையும் மிக துல்லியமாக இந்த தளத்தில் பார்த்து நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.

இதில் காற்றின் வேகம், மின்னல், மழை, வெப்பநிலை, மேக கூட்டங்கள், காற்றின் தரம் உள்ளிட்ட அனைத்தையும் இந்த தளத்தில் நாம் இலவசமாக பார்த்து கொள்ளலாம்.

First published:

Tags: Cyclone, Cyclone Mandous, Tamil News, Weather News in Tamil