ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ள மாண்டஸ் புயல்.. மாமல்லபுரத்தில் நாளை கரையை கடக்கிறது - இந்திய வானிலை ஆய்வு மையம்

அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ள மாண்டஸ் புயல்.. மாமல்லபுரத்தில் நாளை கரையை கடக்கிறது - இந்திய வானிலை ஆய்வு மையம்

மாண்டஸ் புயல்

மாண்டஸ் புயல்

புயல் கரையை கடக்கும் போது, மணிக்கு 65 கிலோ மீட்டர் முதல் 85 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என வானிலை மையம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ள மாண்டஸ், வெள்ளிக் கிழமை நள்ளிரவில் மாமல்லபுரம் பகுதியில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயலாக உருமாறி உள்ளது.காரைக்காலில் இருந்து 420 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 520 கிலோ மீட்டர் தொலைவிலும், தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள 'மாண்டஸ்' புயல், மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: நாளைதான் சம்பவம்.. வட தமிழகத்தின் வெதர் இப்படிதான் இருக்கும் - அலர்ட் கொடுத்த வெதர்மேன்

இந்த புயல், 6 மணி நேரத்திற்குள் அதி தீவிர புயலாக மாறி,வெள்ளிக்கிழமை காலை 9 மணி வரை அதி தீவிர புயலாகவே நீடிக்கும் என்றும் கணித்துள்ளது. அத்துடன், வெள்ளிக்கிழமை நள்ளிரவில் ஸ்ரீஹரிகோட்டா மற்றும் புதுச்சேரி இடையே, மாமல்லபுரம் பகுதியில் கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புயல் கரையை கடக்கும் போது, மணிக்கு 65 கிலோ மீட்டர் முதல் 85 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், வெள்ளிக்கிழமை நள்ளிரவு கரையை கடக்கும் மாண்டஸ் புயல், படிப்படியாக வலுவிழக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Chennai, Cyclone