புயல் வந்தால் மின்சார விநியோகம் கண்டிப்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துண்டிக்க வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவிக்காமல் இருக்க முன்னே ஏற்பாடு செய்திருப்பது நல்லது. புயல் கரையை கடக்கும் தேதி முன்னேரே வானிலை ஆய்வு மையம் அறிவிக்கும் என்பதால் பொதுமக்கள் அதற்கு ஏற்ப நடவடிக்கைளை முன்னேடுப்பது புயல் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்.
மேலும் புயல் கரையை கடக்கும்போது பலத்த காற்று வீசும் என்பதால் அப்போழுது மின் தடை ஏற்படும், டார்ச் லைட், பவர் பேங்க், மெழுகுவர்த்தி, இன்வர்ட்டர் போன்றவற்றை தயார் செய்து வைத்துக்கொள்வது பாதுகாப்பானது.
இதையும் படிங்க: மிரட்டும் மாண்டஸ்.. புயல் எங்க இருக்குன்னு லைவ்-ல பார்க்கணுமா?
மின்சாரம் இருக்கும்போதே செல்போன்கள் மற்றும் பவர் பேங்க் உள்ளிட்டவையை சார்ஜ் செய்து வைத்து கொள்ளவும். உங்களது செல்போன்களை சார்ஜ் செய்துகொண்டு வைத்திருந்தால் ஏதேனும் அபாயம் ஏற்படும் சமயத்தில் அரசு அறிவித்துள்ள சிறப்பு கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து உதவியை தேடி கொள்ளலாம்.
அவசர உதவி மற்றும் இடர் ஏற்பட்டால், காவல்துறை அவசர உதவி எண் 100 அல்லது 112, தீயணைப்பு மற்றும் மீட்பு குழு அவசர உதவி எண்.101 அல்லது 112 ஆகியவற்றில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு உதவி கேட்டு கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cyclone Mandous