ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மாண்டஸ் புயல்.. வழக்கம்போல் கிடைக்குமா ஆவின் பால்.? அமைச்சர் திடீர் ஆய்வு!

மாண்டஸ் புயல்.. வழக்கம்போல் கிடைக்குமா ஆவின் பால்.? அமைச்சர் திடீர் ஆய்வு!

ஆவின்

ஆவின்

Mandous cyclone : சென்னை அம்பத்தூர் ஆவின் நிறுவனத்தில் அமைச்சர் நாசர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னை முழுவதும் மாண்டஸ் புயலால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. அதேபோல புறநகரில் பல்வேறு இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில்  சென்னை அம்பத்தூர் ஆவின் நிறுவனத்தில் அமைச்சர் நாசர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்

வழக்கமாக, சென்னை முழுவதும் இரவு நேரங்களில் வழக்கமாக பால் விநியோகம் செய்வது வழக்கம். அந்த வகையில் தற்போது சீரான பால் விநியோகம் நடைபெறுகிறதா என அமைச்சர் கொரட்டூர் ஆவின் நிறுவனத்தில் திடீர் ஆய்வு செய்தார்.

இதையும் படிங்க: உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியல்.. தொடர்ந்து 4ஆவது முறையாக இடம் பிடித்தார் நிர்மலா சீதாராமன்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு செல்லக்கூடிய 14 லட்சம் லிட்டர் பால் ( 28 லட்சம் பாக்கெட்டுகள்) உற்பத்தி செய்யும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. அதை அமைச்சர் நாசர் ஆவின் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்

தற்பொழுது 12 லட்சம் லிட்டர் பால் விநியோகத்திற்கு சென்றுள்ள நிலையில் மீதமுள்ள பால் பாக்கெட்டுகளை பேக்கிங் செய்யும் பணி தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் 33 வாகனங்கள் செல்ல வேண்டிய சூழலில் இதுவரை 21 வாகனங்கள் சென்றுள்ளது. மீதமுள்ள 12வாகனங்கள் ஓரிரு மணி நேரங்களில் சென்றுவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு ஆவின் பால் கிடைப்பதில் சிக்கல் இருக்காது எனக் கூறப்பட்டுள்ளது

First published:

Tags: Aavin, Cyclone Mandous, Weather News in Tamil