ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மாண்டஸ் புயலால் சென்னையில் மட்டும் ரூ.700 கோடி சேதம்?

மாண்டஸ் புயலால் சென்னையில் மட்டும் ரூ.700 கோடி சேதம்?

மாண்டஸ் புயல் சேதம்

மாண்டஸ் புயல் சேதம்

மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் 700 கோடி ரூபாய் அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்டமாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

மாமல்லபுரம் அருகே நேற்று முன் தினம் இரவு கரையை கடந்த மாண்டஸ் புயலால், சென்னை நகரில் 400க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன. அதேபோல் 200க்கும் மேற்பட்ட மரக்கிளைகளும் விழுந்தன. காற்றின் சீற்றம் காரணமாக 150-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள், 200க்கும் மேற்பட்ட சாலைகள், 15க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களும் சேதம் அடைந்தன.

இதையும் படிங்க: முதல்வர் கான்வாயில் தொங்கியபடி பயணம் செய்த சென்னை மேயர் பிரியா.. வைரலாகும் வீடியோ

 

சென்னை மாநகராட்சி மற்றும் காவல் துறை என 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிலைமையை சீரமைக்க களப்பணியில் ஈடுபட்டனர். முதற்கட்ட மதிப்பீடுகளின் படி சென்னையில் 700 கோடி ரூபாய் அளவிற்கு சேதம் ஏற்பட்டிருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களுக்கு பின், முழுமையான சேத மதிப்பு கணக்கிடப்பட்டு, அரசுக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது.

First published:

Tags: Chennai, Cyclone Mandous