முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மாண்டஸ் புயலால் 4 பேர் உயிரிழப்பு.. 3,000 குடும்பங்கள் சிறப்பு முகாம்களில் தங்க வைப்பு

மாண்டஸ் புயலால் 4 பேர் உயிரிழப்பு.. 3,000 குடும்பங்கள் சிறப்பு முகாம்களில் தங்க வைப்பு

மாண்டஸ் புயல்

மாண்டஸ் புயல்

விரைவில் உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர புயலாக மாறி, பின்னர் வலுவிழந்து புயலாக மாறி கரையை நோக்கி நகர்ந்தது. நேற்று இரவு 11 மணி வாக்கில் புயல் கரையை கடக்கும் போது கனமழையுடன் சூரைகாற்றும் வீசியது. சென்னையை புரட்டிப்போட்ட இந்த புயலால் சேதம் பெரிய சேதம் ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தடுக்கப்பட்டுள்ளது.

பெரிய அளவில் மழைப் பொழிவு இருந்தும், பெரிய சேதம் ஏற்படாமல் இருந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் மாண்டஸ் புயலால் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். 98 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 198 வீடுகள் சேதம் அடைந்துள்ளது.

இதையும் படிங்க: முதல்வர் கான்வாயில் தொங்கியபடி பயணம் செய்த சென்னை மேயர் பிரியா.. வைரலாகும் வீடியோ

மேலும் மற்ற சேதங்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 3 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 9 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் உள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது.

top videos

    சென்னையில் 25 ஆயிரம் ஊழியர்கள் களத்தில் உள்ளனர். 900 மேட்டார்களில் 300 மேட்டார்கள் மட்டுமே இயங்கி கொண்டுள்ளது. எந்த சுரங்கப்பாதையிலும் தண்ணீர் தேங்கவில்லை.600 இடங்களில் மின் இணைப்பு நிறுத்தப்பட்டது. இதில் 300 இடங்களில் சீர் செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ள இடங்களில் விரைந்து சீர் செய்யப்படும். சேதங்கள் கணக்கீடு செய்யப்பட்டு, விரைவில் உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

    First published:

    Tags: Chennai, Cyclone Mandous, MK Stalin, Tamil News, Tamilnadu