ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மாண்டஸ் புயல்: புதுச்சேரியில் பவர் கட்.. இருளில் மூழ்கியது கிழக்கு கடற்கரை சாலை!

மாண்டஸ் புயல்: புதுச்சேரியில் பவர் கட்.. இருளில் மூழ்கியது கிழக்கு கடற்கரை சாலை!

மின்சாரம் துண்டிப்பு

மின்சாரம் துண்டிப்பு

Mandous cyclone : புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈசிஆரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மாண்டஸ் புயல் புதுச்சேரி -ஸ்ரீஹரிகோட்டா இடையே இன்று நள்ளிரவு கரையைக் கடக்கவுள்ளது. இதனால் நாளை அதிகாலை வரை மணிக்கு 65 முதல் 75 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போதே சென்னையில் பல பகுதிகளில் கனமழை வெளுக்கத் தொடங்கியுள்ளது

தற்போது சென்னையிலிருந்து 130 கிமீ தொலைவில் மாண்டஸ் புயல் நிலைகொண்டுள்ளது. புயல் நெருங்குவதால் புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு இடையிலான ஈசிஆர் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈசிஆரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது. அதேபோல் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது

First published:

Tags: Cyclone Mandous, Weather News in Tamil