ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மாண்டஸ் புயல்: உஷார்.. புயலின் கண் பகுதிதான் அபாயம்.. கரையைக் கடக்கும் டைம் இதுதான்!

மாண்டஸ் புயல்: உஷார்.. புயலின் கண் பகுதிதான் அபாயம்.. கரையைக் கடக்கும் டைம் இதுதான்!

புயல்

புயல்

Mandous cyclone: காலை விடிவதற்குள் புயல் முழுவதும் கரையைக் கடந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மாண்டஸ் புயல் கரையைக் கடக்க தொடங்கியுள்ளது. தற்போதே சென்னையில் பல பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு 1 மணிக்குள் கரையை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதாவது சென்னையை நெருங்கிவிட்ட புயல் இன்னும் 2 மணி நேரத்தில் முழு வீச்சில் கரையைக் கடக்கத் தொடங்கும். புயலின் கண் பகுதி இரவு 11.30 மணி அளவில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காலை விடிவதற்குள் புயல் முழுவதும் கரையைக் கடந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயலின் முன் பகுதி தற்போது கடக்கத் தொடங்கிய நிலையில் இரவு 11.30 மணிக்கு மேல் புயலின் கண் பகுதி கரையைக் கடக்கும். புயலில் மிகவும் அபாயமானதே இந்த கண்பகுதிதான். முன்பகுதி புயல் கரையைக் கடந்து சற்று இடைவெளி விடுவதுபோல தெரிந்தாலும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. ஏனென்றால் அதன்பிறகு அபாயமான கண்பகுதி கரையைக் கடக்கும்.

First published:

Tags: Cyclone Mandous, Weather News in Tamil