முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மணப்பாறை வாலிபர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்... தம்பியே கொலை செய்தது அம்பலம்

மணப்பாறை வாலிபர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்... தம்பியே கொலை செய்தது அம்பலம்

மணப்பாறையில் அண்ணனை கொலை செய்த தம்பி

மணப்பாறையில் அண்ணனை கொலை செய்த தம்பி

Manapparai : மணப்பாறையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சகோதரர்களுக்கு இடையே பிரச்சனை இருந்து வந்த நிலையில், அண்ணனை தம்பியே குத்தி கொலை செய்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

திருச்சி மாவட்டம், மணப்பாறை கோவிந்தராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குணசீலன். இவருக்கு 7 மகன்கள் உள்ளனர். இதில் கார் ஓட்டுனராக உள்ள 4வது மகன் லெட்சுமிநாராயணன் (வயது 31). சொந்தமாக டிராவல்ஸ் வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த 2ஆம் தேதி காலை வீட்டில் கழுத்தில் கத்திக் குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

இதைப்பார்த்து பதறிப் போன அவரது சகோதரர் சீனிவாசன் உடனே 108 ஆம்புலனஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர். வீட்டில் தூங்கிய லட்சுமிநாராயணன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக்கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் சம்பவ இடத்தில் நேரில் விசாணை நடத்தினார். பின்னர் தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த மணப்பாறை போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், இறந்தவரின் சகோதரரான ஜானகி ராமன் (வயது 30) என்பவரிடம் போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணையில் அவர்தான் கொலை செய்தார் என்பது உறுதியானது.

மேலும் அவர் போலீசாரிடம் கூறியதாவது, ஜானகிராமன் நடவடிக்கைகள் சரியில்லாததால் அதனை லட்சுமிநாராயணன் கண்டித்துள்ளார். மேலும் குடும்ப செலவுக்கும் ஜானகிராமன் பணம் தருவதில்லையாம் இதனால் குடும்ப வரவு செலவு கணக்கு பார்ப்பது தொடர்பாகவும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பிரச்சினை இருந்து வந்துள்ள நிலையில், சம்பவ தினத்தன்று முதல்நாள் இரவும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

Must Read : ஒரே நாளில் 8 ஏவுகணைகளை ஏவி பரிசோதனை - அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வடகொரியா

இதன்பின்பு நள்ளிரவு லட்சுமி நாராயணன் அறைக்குள் தூங்க சென்று விட்டார். இருப்பினும் ஆத்திரம் அடங்காமல் காத்திருந்த ஜானகிராமன் அதன் பின்னர் தூங்கிக் கொண்டிருந்த லட்சுமிநாராயணன் கழுத்தில் கத்தியை வைத்து குத்தி கொலை செய்துவிட்டு பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றது தெரியவந்துள்ளது.

அண்ணனை கொலை செய்த தம்பி கைது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனையடுத்து ஜானகிராமனை கைது செய்த போலீசார் மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றம் உத்தரவின் பேரில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். குடும்ப தகறாறில் அண்ணனை சொந்த தம்பியே கொலை செய்த சம்பவம் மணப்பாறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் - ராமன், மணப்பாறை.

First published:

Tags: Manapparai, Murder case