முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தீபாவளி நெருங்கியும் ஆர்டர்கள் இன்றி பாதிப்பில் மணப்பாறை முறுக்குத் தொழில்..

தீபாவளி நெருங்கியும் ஆர்டர்கள் இன்றி பாதிப்பில் மணப்பாறை முறுக்குத் தொழில்..

மணப்பாறை முறுக்கு

மணப்பாறை முறுக்கு

தீபாவளி என்றாலே முறுக்குதான் முக்கியமான திண்பண்டமாக இருக்கும். அதிலும் மணப்பாறை முறுக்கு என்பது அனைவருக்கும் பிடித்தமான இன்று. ஆனால் இந்த வருடம் முறுக்கு தொழில் ஆர்டர்கள் இன்றி கிடக்கின்றன என தொழிலாளர்களும் வியாபரிகளும் வேதனையாக கூறுகின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பகுதி தயாரிக்கப்படும் முறுக்கை, தமிழகம் மட்டுமின்றி அமெரிக்கா, லண்டன்,மலேசியா, சிங்கப்பூர், குவைத் உள்ளிட்ட பல்வேறு வெளி நாடுகளுக்கு செல்வோரும் மணப்பாறை விரும்பி வாங்கிச் செல்வார்கள். வழக்கமாவே முறுக்கு விற்பனை அமோகமாகத் தான் இருக்கும். ஆனால் தீபாவளி போன்ற பண்டிகை காலம் நெருங்கி விட்டால் விற்பனை பன்மடங்கு அதிகரிக்கும். அதற்கு காரணம் தீபாவளியின் போது திண்பண்டங்களில் முறுக்கிற்கும் முக்கியத்துவம் அளித்து அனைவருக்கும் வழங்குவார்கள்.

இதனால் முறுக்கு விற்பனைக்கான ஆர்டர்கள் குவிந்த வண்ணம் இருக்கும். இந்த தொழிலை நம்பித்தான் சுமார் 3000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டைப் பொறுத்தவரை அனைத்து தொழில்களையும் முடங்கி வைத்த கொரோனா முறுக்கு தொழிலை முற்றிலுமாக நொருக்கி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 தினங்களே உள்ள நிலையில் கடந்த ஆண்டில் 10 சதவிகிதம் கூட இந்த ஆண்டு ஆர்டர்கள் வரவில்லை. இதனால் முறுக்கு தொழிலை நம்பி இருந்தவர்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. அரிசி முறுக்கு, புதினா முறுக்கு, தேன் குழல் முறுக்கு, கார முறுக்கு என விதவிதமான முறுக்குகளை மக்கள் விரும்பி வாங்கிச் சென்ற நிலை மாறி இந்த ஆண்டு முறுக்கே இல்லாத தீபாவளியை போன்று மாற்றி விட்டது.

கார்த்திகை மாதம் தொடங்க உள்ள நிலையில் சபரிமலை செல்லும் பக்தர்களும் அதிக அளவில் முறுக்கை வாங்கிச் செல்வார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக அங்கும் பக்தர்களின் வருகையும் இல்லாமல் உள்ளது.

மேலும் படிக்க..  நான் போட்டியிடும் தொகுதி குறித்து தலைமைதான் முடிவு செய்யும்..’ - உதயநிதி ஸ்டாலின்

top videos

    இதனால் முறுக்கு தொழில் என்பது முற்றிலுமாக முடங்கிப்போய் கிடக்கின்றது. முறுக்கு தொழிலை நம்பி வாழ்ந்தவர்களின் நிலையும் பரிதாபத்திற்குரியதாகத் தான் இருக்கின்றது. பணமதிப்பிழப்பு, பிளாஸ்டிக் தடை, கொரோனா என ஒவ்வொரு ஆண்டும் பாதிப்பையே சந்தித்து பிழைப்பு நடத்தி வந்தாலும் இந்த ஆண்டு வறுமையின் கோரப்பசிக்கு ஆளாகி உள்ளதாக முறுக்கு தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    First published:

    Tags: Deepavali, Diwali, Manaparai, Snacks