வறண்ட பகுதியில் விவசாயத்தை பெருக்கக்கூடிய திட்டம் செய்து முடிக்கப்படும் - மணப்பாறை மமக வேட்பாளர்

அப்துல் சமது

இந்த வறண்ட பகுதியில் விவசாயத்தை பெருக்கக்கூடிய திட்டம் செய்து முடிக்கப்படும் என்றும் கல்வியில் தமிழகம் உயர்வடைந்ததற்கு அண்ணாவும், கலைஞருமே காரணம் எனவும் மணப்பாறை  மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் அப்துல் சமது கூறினார்.

 • Share this:
  இந்த வறண்ட பகுதியில் விவசாயத்தை பெருக்கக்கூடிய திட்டம் செய்து முடிக்கப்படும் என்றும் கல்வியில் தமிழகம் உயர்வடைந்ததற்கு அண்ணாவும், கலைஞருமே காரணம் எனவும் மணப்பாறை  மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் அப்துல் சமது கூறினார்.

  திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் அப்துல் சமது துவரங்குறிச்சி நகர பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

  அவருக்கு பெண்கள் திரண்டு வந்து ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். அப்போது உப்பிலியபட்டியில், சிறுமி ஒருவர் ஸ்டாலின்தான் வறாரு என்ற பாடலை பாடி வரவேற்பு அளித்தார்.

  பரப்புரையின் போது பேசிய மமக வேட்பாளர் அப்துல் சமது,   திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள திட்டங்களை எல்லாம் மணப்பாறை பகுதிக்கு கொண்டு வருவதற்கு ஒரு சிறந்த சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்.

  தமிழ்நாடு இந்தளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது என்றால் தொடக்கமாக பெருந்தலைவர் காமராஜர் இருந்தார். அதனைத் தொடர்ந்து அண்ணாவும், கலைஞரும் இந்த அளவிற்கு மக்களை கல்வியில் உயர்த்தியுள்ளனர்.

  Must Read : எய்ம்ஸ் மருத்துவமனை கட்டவிருந்த இடத்தில் செங்கலை திருடிவிட்டார் உதயநிதி ஸ்டாலின் - பாஜக நிர்வாகி போலீசில் புகார்

   

  அதனை மேலும் உயர்த்தும் வகையில் பெண்களை கல்வியை உயர்த்தும் வகையில படித்த பெண்களுக்கு திருமண நிதியுதவித்திட்டத்தை கலைஞர் அறிவித்தார். மணப்பாறையில் கலை அறிவியல் கல்லூரி, காவிரி உபரி நீரை கால்வாய் வழியாக கொண்டுவந்து இந்த வறண்ட பகுதியில் விவசாயத்தை பெருக்கக்கூடிய திட்டமும் செய்து முடிக்கப்படும்” என்று கூறினார்.

  - செய்திளாளர், ராமன்
  Published by:Suresh V
  First published: