Home /News /tamil-nadu /

பணியின்போது உயிரிழந்த காவலர்: 12.5 லட்சம் நிதி திரட்டி காசோலை வழங்கிய சக காவலர்கள்..

பணியின்போது உயிரிழந்த காவலர்: 12.5 லட்சம் நிதி திரட்டி காசோலை வழங்கிய சக காவலர்கள்..

பணியின்போது உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு 12 லட்சத்து 50 ஆயிரம் நிதி வழங்கிய காவலர்கள்.

பணியின்போது உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு 12 லட்சத்து 50 ஆயிரம் நிதி வழங்கிய காவலர்கள்.

மானாமதுரையில் பணியின்போது உயிரிழந்த காவலரின் குடுபத்திற்க்கு காவல்துறையைச் சேர்ந்த நண்பர்கள் ஒன்றிணைந்து 12.5 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கீழப்பசளை கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகுரு (42). சிவகங்கை ஆயுதப்படை தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்த இவர், சில நாட்கள் முன் பணியின்போது திடீரென்று உயிரிழந்தார்.

இவர் 2002-ஆம் ஆண்டு முதல் காவல்துறையில் பணிபுரிந்தார். இவருடன் அதே ஆண்டு பணியில் சேர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வேலை செய்துவரும் 3,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் ஒருங்கிணைந்து பாலகுருவின் குடும்பத்துக்கு உதவ முன்வந்துள்ளனர். அதன் அடிப்படையில் 12.5 லட்சம் ரூபாய் நிதி திரட்டி, பாலகுருவின் மகன் லெனின் பெயரில் டெபாசிட் செய்து காசோலை வழங்கியுள்ளனர்.

Also read: கடைசி நேரத்தில் சதூர்யமாக செயல்பட்ட விமானி... ஏராளமான பயணிகள் உயிர் தப்பிய சம்பவம்

அதை வழங்குவதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். உதவி செய்த அனைத்து காவலர்களுக்கும் பாலகுருவின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர். போலீசாரின் சேவைகள் பொது மக்களுக்கு மட்டும் அல்லாமல் தன்னுடன் பணியாற்றும் சக போலீசாருக்கும்தான் என்பதை உணர்த்தும் வகையில் அந்நிகழ்வு அமைந்தது.
Published by:Rizwan
First published:

Tags: Manamadurai

அடுத்த செய்தி