Home /News /tamil-nadu /

ரேஷன் அரிசி தரம் சரியில்லை என்று கூறி சாலையில் கொட்டிய நபர் மீது வழக்குப்பதிவு...!

ரேஷன் அரிசி தரம் சரியில்லை என்று கூறி சாலையில் கொட்டிய நபர் மீது வழக்குப்பதிவு...!

News18

News18

அதன் வீடியோ காட்சியை சமூக வலைதளத்தில் போடும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.

  • News18
  • Last Updated :
    ரமணி என்ற நபர் ரேஷன் அரிசி குண்டு குண்டாக இருப்பதாகக் கூறி சாலையில் கொட்டிய வீடியோ வைரலாகப் பரவியதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

    நாகை அருகே இலவச ரேஷன் அரிசியை சாலையில் கொட்டிய ரமணி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெருமாள் கோவில் தெற்கு வீதியில் உள்ள ரேசன் கடையில் வாங்கிய அரிசி, குண்டுஅரிசியாக உள்ளது என சாலையில்  கொட்டினார்.

    அதன் வீடியோ காட்சியை சமூக வலைதளத்தில் போடும்படியும் அவர் கேட்டுக்கொண்டார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை அடுத்து ரேஷன் கடை ஊழியர் அறிவழகன் குத்தாலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

    அரசு வழங்கும் இலவச அரிசித்திட்டத்தை கொச்சைப்படுத்தும் நோக்குடன் செயல்பட்டதாகவும், அரசுப்பணியாளர்களை அவமதித்தது, மற்றும் மிரட்டல் விடுத்ததாகவும் ரமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரமணியை போலீசார் தேடி வருகின்றனர்.

     
    Published by:Sivaranjani E
    First published:

    Tags: Nagai

    அடுத்த செய்தி