பழனியில் இடத்தகராறு மோதல்.. துப்பாக்கியால் சுடப்பட்டவர் உயிரிழப்பு..

குற்றவாளி நடராஜன்

பழனியில் இடத்தகராறில் தியேட்டர் உரிமையாளர் துப்பாக்கியால் சுட்டதில் இருவர் காயமடைந்திருந்த நிலையில், அதில் சுப்பிரமணி என்பவர் சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் உயிரிழந்தார்.

 • Share this:
  பழனியில் இடப் பிரச்சினை தொடர்பாக தியேட்டர் உரிமையாளர் நடராஜன் கைத் துப்பாக்கியால் சுட்டதில் இருவர் காயமடைந்து  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில் பழனிச்சாமி என்பவருக்கு தொடைப்பகுதியில் குண்டு பாய்ந்த நிலையில் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பழனி அரசு மருத்துவமனை  மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து பழனிசாமி உடலில் இருந்த குண்டை அகற்றினர்.

  ராமபட்டினம் புதூரை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் மார்பு பகுதியில் குண்டு பாய்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

  மதுரை அரசு மருத்துவமனையில் சுப்பிரமணியனுக்கு அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் குண்டை அகற்றினர். இந்த நிலையில் சுப்பிரமணியன் சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் உயிரிழந்ததார். பழனியில் இட பிரச்சினை தொடர்பாக துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  மேலும் படிக்க.. மதுரை: 10 ஆண்டுகளாக தொடரும் பழிக்குப்பழி படுகொலைகள்.. இளைஞர் ஓட ஓட விரட்டப்பட்டு வெட்டிப் படுகொலை.. நடந்தது என்ன?  மேலும் இந்த துப்பாக்கிசூடு வழக்கில் கைது செய்யப்பட்ட நடராஜன் நிலக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மும்தாஜ் அவர்களின் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டார். நீதிபதி உத்தரவின் பேரில் பழனி கிளை சிறையில் 15 நாள் காவலில் நடராஜன்  வைக்கப்பட்டுள்ளார்.
  Published by:Vaijayanthi S
  First published: