Home /News /tamil-nadu /

5 சிறுமிகள்.. தாய்.. சித்தி... யாரையும் விட்டுவைக்காத பாலியல் அரக்கன்!

5 சிறுமிகள்.. தாய்.. சித்தி... யாரையும் விட்டுவைக்காத பாலியல் அரக்கன்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

30 வயது பெண்ணின் 9 வயது மகளுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக தாயின் அனுமதியோடு பெருமாள், பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

11, 9, 4 வயது சிறுமிகள் உட்பட 5 சிறுமிகளுக்கு தாய் மற்றும் சித்தியின் உதவியுடன் பாலியல் தொல்லை.... தாய் மற்றும் சித்தி உட்பட மூன்று நபர்கள் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் கைது.

சென்னை கீழ்பாக்கத்தை அடுத்த டி.பி சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள்(48). இவருக்கும் கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண்ணுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.

பின்னர் 30 வயது பெண்ணின் சகோதரியான 28 வயது பெண்ணுடன் அவருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

Also Read:  தங்கக்கடத்தல்.. சினிமா பாணியில் கார் சேஸிங் - டிரைவர் கடத்தலில் திடீர் திருப்பம்

இந்த நிலையில் 30 வயது பெண்ணின் 9 வயது மகளுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக தாயின் அனுமதியோடு பெருமாள், பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் சிறுமியின் வீட்டுக்கு வரும் சிறுமியின் தோழிகளான 11 வயது மற்றும் 4 வயது சிறுமிகளுக்கும் சிறுமியின் தாய் மற்றும் சித்தியின் அனுமதியுடன் பெருமாள் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

மேலும் சிறுமியின் தாய் மற்றும் சித்தியின் உதவியுடன் அருகாமை வீட்டில் வசிக்கும் 15 வயது மற்றும் 17 வயது சிறுமிகளுக்கும் பெருமாள் பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனையடுத்து 5 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த பெருமாள் மற்றும் சிறுமியின் தாய், சித்தி ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் துறையினர் இவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Published by:Arun
First published:

Tags: Crime | குற்றச் செய்திகள், Sexual harassment

அடுத்த செய்தி