• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஆசிரியயைக் குத்திக் கொன்று தானும் தற்கொலை... பின்னணி என்ன?

ஆசிரியயைக் குத்திக் கொன்று தானும் தற்கொலை... பின்னணி என்ன?

கொலையில் முடிந்த ஒருதலை காதல்

கொலையில் முடிந்த ஒருதலை காதல்

கடலூரில் ஒருதலை காதலால், பள்ளி ஆசிரியரை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்துக்கொண்ட ராஜசேகர்ரால் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
கடலூரில் ஒருதலை காதலால் தனியார் பள்ளி ஆசிரியையை கொலை செய்த இளைஞரை போலீசார் தேடி வந்த நிலையில், தூக்கில் தொங்கிய நிலையில் அவர் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த ரம்யா என்பவர் அருகில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். விருத்தாச்சலத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் ஆசிரியை ரம்யாவை பல ஆண்டுகள் ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது.

இருவரும் ஒரே கல்லூரியில் படித்தபோதே, ரம்யாவிடம் பலமுறை ராஜசேகர் காதலை தெரிவித்துள்ளார். ஆனால், ராஜசேகரை காதலிக்க ரம்யா தொடர்ந்து மறுத்துள்ளார்.

இதையடுத்து, ரம்யாவின் வீட்டிற்கே சென்று ராஜசேகர் பெண்கேட்ட போதிலும், ரம்யாவின் பெற்றோரும் மறுத்துவிட்டனர். இதனால், ஆத்திரமடைந்த ராஜசேகர் கடந்த 22-ம் தேதி ரம்யா பணிபுரியும் பள்ளிக்கு சென்று அவரை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடினார்.

இதில் ரத்த வெள்ளத்தில் இருந்த ரம்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுதொடர்பாக ராஜசேகரை போலீசார் தேடி வந்த நிலையில், தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக தனது சகோதரிக்கு ராஜசேகர் குறுந்தகவல் அனுப்பியுள்ளார்.

ராஜசேகரின் மொபைல் சிக்னலை வைத்து அவர் இருக்கும் இடம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, விழுப்புரம் தொப்பையாங்குளம் கிராமத்தில் உள்ள முந்திரி காட்டில் ஒரு இருசக்கர வாகனம் தனியாக கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அப்பகுதியில் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, அங்குள்ள முந்திரி மரத்தில் ஒரு இளைஞர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதையடுத்து அவரது சடலத்தை மீட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ஆசிரியை ரம்யாவை கொலை செய்த ராஜசேகர் என்பது தெரியவந்தது.

Also see... ஒரு தலை காதல்... வகுப்பறையிலேயே ஆசிரியை படுகொலை

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: