மருத்துவமனை காவலாளி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை! நெல்லையில் மீண்டும் தலைதூக்கும் சாதிய கொலைகள்?

நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில காலங்காக ஓய்ந்திருந்த ஜாதிய கொலைகள் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Web Desk | news18
Updated: July 6, 2019, 7:50 AM IST
மருத்துவமனை காவலாளி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை! நெல்லையில் மீண்டும் தலைதூக்கும் சாதிய கொலைகள்?
வெட்டிப் படுகொலை (கோப்புப் படம்)
Web Desk | news18
Updated: July 6, 2019, 7:50 AM IST
நெல்லை - பாளையங்கோட்டை சுப்பிரமணியபுரம் பகுதியில் தனியார் மருத்துவமனை காவலாளி வெட்டிக்கொலை. பழிக்குப்பழியாக கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை.

நெல்லை பாளையங்கோட்டை வஉசி மைதானம் எதிரே அமைந்துள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் பெருமாள்கண்ணன் (வயது 54).

இவர் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.


தூத்துக்குடி மாவட்டம் பக்கபட்டி இவரது சொந்த ஊராகும் இவரது மகள் பாளையங்கோட்டையில் உள்ள கல்லூரியில் படித்து வருவதால் அங்கேயே குடியேறியுள்ளார்.

இந்த நிலையில் இவர் இரவுப்பணி முடித்து வீடு திரும்பும் வழியில் சுப்பிரமணியபுரம் அருகே மர்ம நபர்கள் இவரை தொடர்ந்து வந்து வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டனர்.

அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Loading...

சம்பவ இடத்தில் பாளையங்கோட்டை உதவி ஆணையர் கோடிலிங்கம் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

போலீசார் விசாரணையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சுடலைமணி மற்றும் அவரது தாத்தா முத்துசாமி ஆகிய இருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டதும்,  தாழ்த்தப்பட்டவர்களுக்கு தாமிரபரணி ஆற்றில் படித்துறை இல்லை என கூறியதால் ஏற்பட்ட மோதலில் தாத்தாவும் பேரனும் கொலை செய்யப்பட்டனர். அந்த கொலையில் பெருமாள் கண்ணனுக்கு தொடர்பு இல்லை என்பது தெரியவந்தது.

இருந்தபோதிலும் பழிக்கு பழியாக இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில காலங்காக ஓய்ந்திருந்த சாதிய கொலைகள் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also watch: அரசு மருத்துவமனையில் நிர்வாண நிலையில் குடிநீர் கேட்டு கதறிய நோயாளி! கண்கலங்க வைத்த காட்சி
First published: July 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...