கைகளில் சானிடைசர் பயன்படுத்தியவுடன் சிகரெட் பற்றவைத்த நபர் தீயில் கருகிய பரிதாபம்..., படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

கைகளில் சானிடைசர் பயன்படுத்தியவுடன் சிகரெட் பற்றவைத்த நபர் தீயில் கருகிய பரிதாபம்..., படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

கோப்புப் படம்

சென்னையில் சானிடைசரைப் பயன்படுத்திய பிறகு சிகரெட் பற்றவைத்ததால் தீயில் கருகியுள்ளார் கார்பெண்டர்.

 • Share this:
  சென்னை அசோக் நகரைச் சேர்ந்தவர் ரூபன். அவருக்கு வயது 50. அவர் கார்பென்டராக பணி செய்துவருகிறார். அவர், நேற்று அவர் மீது தீ பற்றி எரிந்துள்ளது. உறவினர்களிடம் கேட்டு தெரிந்துகொண்டதன் அடிப்படையில் இதுகுறித்து தெரிவித்த காவல்துறையினர், ‘நேற்று இரவு ரூபன் வேலை முடிந்து வீட்டுக்குச் சென்றுள்ளார். வீட்டுக்குச் சென்றவர் கைகளை சானிடைசர் கொண்டு சுத்தம் செய்துள்ளார்.

  அப்போது, சானிடைசர் அவரது சட்டையிலும் பட்டுள்ளது. அவர், அப்படியே கழிவறைக்குச் சென்றுள்ளார். கழிவறைக்குச் சென்ற அவர், சிகரெட்டைப் பற்றவைத்துள்ளார். அப்போது, சடாரென தீ அவரது கைகளிலும், சட்டையிலும் பற்றி எரிந்தது.

  உடனே, அவர் உதவி கேட்டு கதறியுள்ளார். வீட்டிலிருந்தவர்கள் கதவை உடைத்து தீயை அணைத்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். இதுகுறித்து அசோக் நகர் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். இதுகுறித்து தெரிவித்த காவல்துறையினர், ‘சானிடைசர் பயன்படுத்திய பின் உடனே சிகரெட்டைப் பற்ற வைப்பது ஆபத்தானது’ என்று தெரிவித்துள்ளார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: