வீட்டில் எந்த பொருள் இல்லையென்றாலும், அல்லது புதிதாக ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றாலும் பலர் ஆன்லைன் ஷாப்பிங் செய்வது வழக்கம். அதிக தள்ளுபடியில் சிறந்த தரமான பொருட்களை வாங்குவதற்காக ஆன்லைன் ஷாப்பிங்கை விரும்புகின்றனர். அதிலும் ஆன்லைனில் ஏராளமான பொருட்கள் குவிந்து கிடக்கிறது. இதன்மூலம் அவற்றில் எது சிறப்பானதோ அதை பெற்று கொள்வார்கள். இப்படி ஸ்மார்ட்போன் வாங்கும்போதும், நாம் பல மொபைல்களை ஒப்பிட்டு பார்த்து வாங்குவோம்.
இங்கிலாந்தை சேர்ந்த டேனியல் கரோல் என்பவரும் தனக்கான ஸ்மார்ட்போனை தேடி தேடி பார்த்து ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடலை தேர்வு செய்து ஆர்டரும் செய்துள்ளார். தனக்கு பிடித்த மொபைல் விரைவில் தன்னை வந்து சேரும் என்று எதிர் பார்த்து கொண்டிருந்த அவருக்கு மிக பெரிய அதிர்ச்சி தான் காத்திருந்தது. சுமார் 1 லட்சம் (£1,000) மதிப்பிலான ஐபோனை பெறுவதற்கு பதிலாக 2 கேட்பரி ஒயிட் ஓரியோ சாக்லேட்டை பெறுள்ளார். அந்த பார்சலை திறந்து பார்த்ததும் அவருக்கு மாபெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
அவர் ஆர்டர் செய்த ஐபோன் சுமார் 2 வாரங்களுக்கு பிறகு தான் தாமதமாக டெலிவரி ஆனது. தான் ஆர்டர் செய்த ஆர்டர் இன்னும் வந்து சேரவில்லை என்பதால் அருகில் உள்ள DHL கிடங்கிற்கு சென்று, அவரின் பார்சலை பெற்றுள்ளார். அதிலும் இருந்த புராடக்ட் ஐபோன் இல்லை என்று தெரிந்ததும் டேனியல் என்ன செய்வது என்று தெரியாதவாறு திகைத்து விட்டார். இது போன்ற பல்வேறு சம்பவங்கள் இதற்கு முன்னர் நடந்திருந்தாலும், ஐபோன் மொபைலுக்கும் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளதை அவரால் நம்ப முடியவில்லை.
ALSO READ | கணினி அல்லது லேப்டாப் பிரவுசரில் வெப்-கேமராவை செயலிழக்கச் செய்வது எப்படி?
பிறருக்கு இதை பற்றி ஆப்பிள் வெப்சைட்டில் புகாராக தெரிவிக்க வேண்டுமென்று எண்ணி உள்ளார். அதன்படி, புகாரும் தெரிவித்துள்ளார். அதில், "நான் டிசம்பர் 2 ஆம் தேதி ஐபோனை ஆர்டர் செய்தேன். ஆனால் புராடக்ட் இருப்பின் காரணமாக டெலிவரிக்கான தேதி டிசம்பர் 17 என்று அதில் இருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று டெலிவரி செய்யப்படவிருந்த, DHL-இல் இருந்து பல முரண்பட்ட அப்டேட்க்கள் எனக்கு வந்தன" என்று அவர் ஆப்பிள் தளத்தில் புகார் பதிவிட்டுள்ளார்.
இப்படி பல காரணங்கள் டேனியலுக்கு வந்த வண்ணம் இருந்ததால், டிராக்கிங்கில் உள்ள இடத்திற்கு சென்று பார்சலை அவர்களின் டிப்போவிலிருந்து வாங்குவதாக முடிவெடுத்தார், பிறகு அதில் சனிக்கிழமை அவற்றை வாங்கி கொள்ளுமாறு அப்டேட் வந்ததாக அவர் கூறியுள்ளார். அடுத்து திங்கட்கிழமை 24 மைல் பயணம் செய்து அந்த பார்சலை வாங்கி வந்தார். அதை திறந்து பார்த்ததும் ஐபோனுக்கு பதிலாக 2 கேட்பரி சாக்லேட் டாய்லட் பேப்பரை கொண்டு சுற்றப்பட்டு அதனுள் இருந்தது.
ALSO READ | உங்கள் ஐபோன் ஸ்டோரேஜ் பிரச்சனையை தீர்ப்பதற்கான டிப்ஸ் & டிரிக்ஸ்!
இதை அறிந்து கொண்ட அந்த டெலிவரி நிறுவனம், எப்படி இது நடந்தது என்பதை விசாரிப்பதாகவும், டேனியல் ஆர்டர் செய்த ஐபோனை அவருக்கு டெலிவரி செய்வதாகவும் கூறியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.