பணக்கார பெண்ணை மணக்க பேராசை... காதலியை கொன்று புதைத்த ராணுவ வீரர்...

பணக்கார பெண்ணை மணக்க பேராசை...  காதலியை கொன்று புதைத்த ராணுவ வீரர்...
காதலி கொலை
  • News18
  • Last Updated: July 25, 2019, 11:04 PM IST
  • Share this:
கன்னியாகுமரி அருகே, மிஸ்டு கால் மூலம் கிடைத்த காதலியை 6 ஆண்டுகளாக உயிருக்கு உயிராகக் காதலித்து விட்டு கடைசியில் கொலை செய்து வீட்டுத் தோட்டத்தில் புதைத்துள்ளார் ராணுவ வீரர். 

கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரளா எல்லை மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய அம்பூரி மலையோர சேர்ந்தவர் அகில்.

இவர் கடந்த 6 வருடங்களுக்கு முன் தனது மொபைல் போனில் ஒரு மிஸ்டு கால் வந்ததை தொடர்ந்து அந்த நம்பர்-க்கு திரும்பி கால் செய்துள்ளார். அழைப்பை எடுத்த பெண் தவறாக மாறி வந்தது என கூறியுள்ளார்.


ஆனால், அகில் அந்த அழைப்பில் பெண் என்பதால் தொடர்ந்து அந்த மொபைல் போனிற்கு கால் செய்து வந்துள்ளார்.

அந்த பெண் திருவனந்தபுரம் மாவட்டம் நெய்யாற்றின் கரை அருகே திருபுறம் பகுதியை சேர்ந்த ராகி மோள் என்று தெரியவந்தது. நாளடைவில் அகில் ,  ராகி இடையே காதல் மலர்ந்தது.

திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்த நிலையில், அகில் ராணுவத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார். இதற்கிடையே ராகி எர்ணாகுளத்தில் ஒரு தனியார் கம்பெனியில் பணிக்கு சேர்ந்தார்.ராகி ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண் என்பதால், அகிலும் அவரது குடும்பத்தினரும் ராகியை புறக்கணித்தனர்.

அகிலுக்கு, வசதியான குடும்பத்தில் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முடிவெடுத்து ஆலோசனை மேற்கொண்டு வந்தனர்.

இதை தெரிந்த ராகி தன்னை கைவிட கூடாது என அகில் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் வலியுறுத்தி வந்ததோடு தன்னை கைவிட்டால் தற்கொலை செய்ய போவதாக கூறினார்.

இந்நிலையில், விடுப்பில் ஊருக்கு வந்த அகிலனுக்கு  கடந்த சில தினங்களுக்கு முன்பு  வசதியான குடும்பத்தை சேர்ந்த வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

இந்நிலையில், கடந்த  21-ம் தேதி தனது வாழ்க்கையில் ராகி இடையூறாக இருக்க கூடாது என நினைத்து ராகியை தனது காரில் அழைத்து சென்ற அகில்,  தன் வீட்டில் வைத்து கொலை செய்துள்ளார்.  ராகியின் உடலை வீட்டு வளாகத்தில் உள்ள தோட்டத்தில் புதைத்துள்ளார்.

ராகியை காணாமல் உறவினர்கள் காவல்துறைக்கு புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து ராகியின் செல்போன் நகர்வுகளை பார்த்த கேரளா போலீசார் அகிலின் வீடு மற்றும் வீட்டு வளாகத்தை சோதனை நடத்தினர். அப்போது அகிலுக்கு சொந்தமான தோட்டத்துக்குள் சந்தேகமான இடத்தில் தோண்டி சோதனையை மேற்கொண்டனர்.

அந்த இடத்தில் ராகியின் உடலை புதைத்து வைத்திருப்பதை கண்டுப்பிடித்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அகிலின் சகோதரர் ராகுல் மற்றும் நண்பர் ஆதர்ஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இதையறிந்த, அகில் மற்றும் அவரது தந்தை தலைமறைவாயினர். இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த கொலை சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம் தமிழக - கேரள எல்லை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also watch: ரூட் தல மோதலுக்கு பதில் தாக்குதல்; கை உடைந்த நிலையில் கைதானவர்கள் - பின்னணி என்ன?

First published: July 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading