7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு இரட்டை மரண தண்டனை... புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...

Youtube Video

அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவனுக்கு இரட்டை மரண தண்டனை அளித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

 • Share this:
  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற குற்றவாளிக்கு, இரட்டை மரண தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஏம்பல் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த சிறுமியை, கோவிலில் பொங்கல் வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொன்றார். கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக, புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

  இதில் கடந்த 19 நாட்களாக தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் முடிவில், நீதிபதி சத்யா தீர்ப்பை வெளியிட்டார். அதன்படி, ராஜாவிற்கு இரட்டை மரண தண்டனையுடன், சாட்சியை அழித்ததற்காக 7 ஆண்டுகளும், கடத்தியதற்காக 7 ஆண்டுகளும், தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த சிறுமியை கடத்தி கொன்றதற்காக, 5 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.  மேலும் படிக்க...சிறுமி மீது கொண்ட ஆசையால் மனைவியை அடித்துக் கொன்ற கணவன்..  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: