துபாயிலிருந்து சென்னைக்கு ரூ.40 லட்சம் மதிப்பிலான தங்கத்தை ஆசனவாயில் வைத்து கடந்தி வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துபையிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகள் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. அதன்படி சென்னை விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் அவா்களின் உடைமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனா்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான நபரை அடையாளம் கண்ட அதிகாரிகள் அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று அவர்கள் பாணியில் சோதனை செய்தனா். அப்போது, அந்த நபர் அவரது ஆசனவாயில் வைத்து 948 கிராம் எடையிலான 4 பொட்டலங்களை எடுத்து வந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து, அதனை பிரித்து பார்த்தபோது, 810 கிராம் எடையிலான 24 கேரட் தங்க பேஸ்ட்டுகளை அவர் ஆசனவாயில் வைத்து மறைத்து எடுத்து வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரூ. 40.35 லட்சம் மதிப்பிலான 810 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த நபரை கைது செய்து மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also read: பிரபல பின்னணி பாடகியின் 15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை : 5 வது நபர் போக்சோவில் கைது
தொடர்ந்து, வெளிநாடுகளில் இருந்து சென்னை விமான நிலையம் வருபவர்கள் இதுபோல தங்கத்தை கடத்தி வைத்து கொண்டு வருவது வாடிக்கையாகி வருகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், துபாயில் இருந்து வந்த இருவர் தங்க பேஸ்ட்டை ஆசனவாயில் வைத்து மறைத்து கொண்டு வந்ததாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, சுமார் 35.5 லட்சம் மதிப்புள்ள 706 கிராம் தங்கத்தை சுங்க அதிகாரிகள் கைப்பற்றினர்.
தொடர்ந்து, ஜனவரி மாதத்தில் துபாயிலிருந்து திரும்பிய 17 பயணிகள் ஆசனவாயில் மறைத்து வைத்து சுமார் 3.93 கோடி மதிப்பிலான தங்கத்தை எடுத்து வந்தததாக சுங்கத்துறை அதிகாரிகளிடம் பிடிபட்டனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.