தற்கொலை செய்துகொண்ட காதலியின் நினைவால் தீக்குளித்த இளைஞர்... அதிமுக பிரமுகரை கைது செய்த போலீசார்...

Youtube Video

ராமநாதபுரத்தில் காதல் விவகாரத்தில் இளைஞர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அதிமுக பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 • Share this:
  ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள பனையங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீன். இவரும் பூலாங்குலத்தைச் சேர்ந்த நம்பு கலாவும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்திற்கு இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பிரவீனும், நம்புகலாவும் தங்கள் காதலில் உறுதியாக இருந்துள்ளனர். அப்போது பி. கீரந்தை ஊராட்சி மன்ற தலைவியின் கணவரான அற்புதராஜ் இருவரையும் மிரட்டியதாக கூறப்படுகிறது.

  இதையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பிரவீனின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் மனமுடைந்த நம்புகலா கடந்த பிப்ரவரி மாதம் 11ம் தேதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அப்போது எலிமருந்தை உட்கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்ற பிரவீன் சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்தார். நம்புகலா தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அவரது குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பிரவீனும் அவரது தாயார் புஷ்பாவும் கைது செய்யப்பட்டனர்.

  மேலும் படிக்க.. உணவகத்தில் வாடிக்கையாளரை தாக்கிய விவகாரத்தில் எஸ்.ஐ முத்து பணியிடை நீக்கம் ..

  இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு சிறையிலிருந்து வெளிவந்த பிரவீன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அற்புதராஜ் பணம் கேட்டு மிரட்டியதாகவும், அதனை கொடுக்காததால் தான் தனது மகனின் காதலைப் பிரித்து, அவரது இறப்புக்கு வழிவகுத்ததாகவும் பிரவீனின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் அதிமுக பிரமுகர் அற்புதராஜை போலீசார் கைது செய்தனர்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  -----------------------------------------------------------------------------------------------

  மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104

  சினேகா தற்கொலை தடுப்பு உதவி
  Published by:Vaijayanthi S
  First published: