மனைவி தற்கொலை செய்துகொண்ட சோகத்தில் இரண்டு குழந்தைகளுடன் ரயிலில் பாய்ந்து உயிரை மாய்த்த கணவர்!

மனைவி தற்கொலை செய்துகொண்ட சோகத்தில் இரண்டு குழந்தைகளுடன் ரயிலில் பாய்ந்து உயிரை மாய்த்த கணவர்!
வேலூர் தற்கொலை
  • News18
  • Last Updated: February 4, 2020, 6:27 PM IST
  • Share this:
ராணிப்பேட்டை அருகே மனைவி தற்கொலை செய்து கொண்ட சோகத்தில் கணவர் தனது இரண்டு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மனைவி தற்கொலை செய்து கொண்ட சோகத்தில் இரு குழந்தைகளுடன் கணவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்து தற்கொலை நடந்தது ஏன்? என்ன நடந்தது ராணிப்பேட்டையில்?

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கொண்ட பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலிலியராக பணியாற்றி வருகிறார்.


வெங்கடேசுக்கு நிர்மலா என்ற மனைவியும், 2 வயதில் சஞ்சனா ஸ்ரீ, ஒரு வயதில் ரித்திகா ஸ்ரீ என்ற இரு பெண் குழந்தைகளும் இருந்தன. இந்த நிலையில் நிர்மலாவுக்கும் அவரது மாமியாருக்கும் திங்கட்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த நிர்மலா அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுபற்றி தகவலறிந்து சென்ற சோளிங்கர் போலீசார், நிர்மலாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் மனைவி தற்கொலை செய்துகொண்ட தகவல் அறிந்து மதுரையிலிருந்து வாலாஜாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வெங்கடேஷ் விரைந்து வந்துள்ளார்.மனைவியின் சடலத்தை பார்த்துவிட்டு துக்கம் தாங்காமல் கதறி அழுதுள்ளார். பின்னர் இரு பெண் குழந்தைகளுடன் வாலாஜாபேட்டை ரயில்நிலையத்திற்கு சென்ற வெங்கடேஷ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவத்தில் வெங்கடேஷ், அவருடைய குழந்தைகள் சஞ்சனா ஸ்ரீ, ரித்திகா ஸ்ரீ ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மூன்று பேரின் உடல்களை கைப்பற்றிய வாலாஜா பேட்டை போலீசார் பிரேத பரிசோதனைக்காக மனைவி உடல் இருந்த அதே வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாமியாருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவியும், மனைவி தற்கொலை செய்து கொண்டதால் குழந்தைகளுடன் கணவரும் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ராணிப்பேட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also see:

First published: February 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்