• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வங்கியிலிருந்து பேசுவதாக கூறி ஓ.டி.பியைப் பெற்று ஆன்லைனில் மொபைல் ஆர்டர்- பணத்தை திருப்பி கொடுத்த ஸ்நாப்டீல்

வங்கியிலிருந்து பேசுவதாக கூறி ஓ.டி.பியைப் பெற்று ஆன்லைனில் மொபைல் ஆர்டர்- பணத்தை திருப்பி கொடுத்த ஸ்நாப்டீல்

ஓடிபி

ஓடிபி

சென்னையைச் சேர்ந்த அக்ஷய் என்பவரிடம் வங்கியிலிருந்து பேசுவதாக கூறி ஓ.டி.பி எண்ணைப் பெற்று ஆன்லைனில் மொபைல்போனை ஆர்டர் செய்துள்ளனர்.

  • Share this:
சென்னை சூளைமேடு என்.ஜி.ஓ காலணியை சேர்ந்தவர் அக்ஷய். கல்லூரி மாணவரான இவரின் மொபைல் எண்ணுக்கு கடந்த 7 ம் தேதி வங்கியிலிருந்து பேசுவதாக அழைப்பு வந்துள்ளது.
அப்பொழுது வங்கி கணக்கு குறித்து தகவல் மாற்றுவதற்காக மொபைல் எண்ணுக்கு வரும் OTP எண்ணை சொல்லுமாறு கேட்டுள்ளனர். அக்‌ஷய் சொல்ல அடுத்த சில வினாடிகளில் 9,849 ரூபாய் காணாமல் போயுள்ளது.

இதனையடுத்து ஆன்லைன் மூலம் திருவல்லிக்கேணி சைபர் கிரைம் பிரிவில் அவர் புகார் அளித்தார். விசாரணையில் அவரது வங்கி கணக்கில் இருந்து திருடப்பட்ட பணமானது ஸ்னாப்டீல் நிறுவனத்தில் மொபைல் போன் வாங்குவதற்காக ஆர்டர் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து சைபர் கிரைம் போலீசார் ஸ்னாப்டீல் நிறுவனத்திடம் தொடர்புகொண்டு சட்டவிரோதமாக ஆன்லைனில் திருடப்பட்ட பணம் உங்கள் நிறுவனத்திற்கு பொருள் வாங்குவதற்காக ஆர்டர் செய்யப்பட்டுள்ளது என்ற விவரத்தை கூறியுள்ளனர்.

இதனையடுத்து ஸ்னாப்டீல் நிறுவனம் சட்டவிரோதமாக எங்கள் நிறுவனத்துக்கு வந்த பணத்தை திருப்பி அளித்து விடுவதாக கூறியுள்ளனர். இதனையடுத்து அதற்கு அடுத்த நாளே அந்த பணத்தை திருப்பி அனுப்புவதாக அக்‌ஷயின் மொபைல் எண்ணுக்கு ஸ்னாப்டீல் நிறுவனத்தில் இருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது.
ஸ்னாப்டீல் நிறுவனம் சொல்லியது போலவே அக்‌ஷயின் வங்கிக் கணக்கிற்கு ஆன்லைனில் திருடப்பட்ட பணத்தை நேற்று திருப்பி அனுப்பி உள்ளது.

ஆன்லைனில் திருடப்பட்ட பணத்தை ஓரிரு நாட்களிலேயே மீட்டுக் கொடுத்த திருவல்லிக்கேணி சைபர் கிரைம் போலீசாருக்கு அக்‌ஷய் மற்றும் அவரது சகோதரர் பாப் வில்லிஸ் நன்றியை தெரிவித்ததோடு, போனில் பேசும் யாரிடமும் வங்கி விவரங்கள் மற்றும் OTP எண்ணை தரவேண்டாம் என கேட்டுக்கொண்டனர்.


வங்கியில் இருந்து பேசுவதுபோல் ஓடிபி எண்ணை பெற்ற மர்ம நபர் ஸ்னாப்டீல் நிறுவனத்தில் மொபைல் வாங்குவதற்காக பணம் செலுத்திய சம்பவத்தில் துரிதமாக செயல்பட்டு பணத்தை மீட்டுக் கொடுத்த திருவல்லிக்கேணி சைபர் கிரைம் போலீசார்களை உயரதிகாரிகள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: