Home /News /tamil-nadu /

சென்னையில் பெண்களோடு வந்து போக்குவரத்து காவலரை தாக்கிய நபர்.. இதுதான் காரணம்..

சென்னையில் பெண்களோடு வந்து போக்குவரத்து காவலரை தாக்கிய நபர்.. இதுதான் காரணம்..

 கைது செய்யப்பட்டவர்

கைது செய்யப்பட்டவர்

Crime Chennai : செல்போனை எடுத்து மறைத்து வைத்த நபரிடமிருந்து பறிமுதல் செய்து உரியவரிடம் ஒப்படைத்த காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய சம்பவமானது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
மொபைல் போனை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்ததால் ஆத்திரம் அடைந்த நபர் பெண்களோடு வந்து போக்குவரத்து உதவி ஆய்வாளரை தாக்கிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரியமேடு போக்குவரத்து உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் லட்சுமண பெருமாள்(58) என்பவர் நேற்று முன்தினம் மாலை ரிப்பன் மாளிகை சிக்னல் அருகே பணியில் இருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரு நபரின் மொபைல் போன் கீழே விழுந்து உள்ளது. இதனை அவருக்கு பின்னால் வந்த சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த கண்ணப்பன்(54) என்பவர் மொபைல் ஃபோனை எடுத்து மறைத்து வைத்துக் கொண்டுள்ளார். இதனைபார்த்த பின்னால் வந்த வாகன ஓட்டிகள் கண்ணப்பனிடம் இதுகுறித்து கேட்டுள்ளனர். இதனால் கண்ணப்பனுக்கும் மற்ற வாகன ஓட்டிகளுக்குமிடையே தகராறு எழுந்துள்ளது.

இதனை பார்த்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் லட்சுமண பெருமாள் சென்று விசாரித்ததில் கண்ணப்பன் செல்போனை எடுத்து வைத்துக்கொண்டு தரமறுத்ததாக கூறப்படுகிறது. இதனிடையே மொபைல் போனை தவறவிட்ட நபர் சம்பவ இடத்துக்கு வந்து அந்த மொபைல் தன்னுடையது தான் என நிரூபித்துள்ளார். பின்னர் கண்ணப்பனிடமிருந்து  அவரிடம் செல்போனை வாங்கி எச்சரித்து பின் மொபைல் போனை உரியவரிடம் காவல் உதவி ஆய்வாளர் ஒப்படைத்துள்ளார். இந்த நிலையில் மீண்டும் நேற்று அதே சிக்னலில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் லட்சுமண பெருமாள் பணியில் இருந்த போது கண்ணப்பன் 4 பெண்களோடு அங்கு வந்துள்ளார். தான் அழைத்து வந்த பெண்களிடம் சொல்லி உதவி ஆய்வாளரை அநாகரிகமாக திட்டச் செய்துள்ளார்.

இதனையடுத்து உதவி ஆய்வாளர் லட்சுமண பெருமாள், அநாகரிகமாக பேசிய நான்கு பெண்கள் மற்றும் கண்ணப்பனை எச்சரித்துள்ளார். அப்போது எதிர்பாராத நேரத்தில் கண்ணப்பன், காவல் உதவி ஆய்வாளரான லட்சுமணப் பெருமாள் சட்டையைப் பிடித்து கன்னத்தில் அடித்துள்ளார். இதையடுத்து, உதவி ஆய்வாளர் தகவல் தெரிவித்ததன் பேரில் பெரியமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து கண்ணப்பனை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

ALSO READ |  மின்சார சட்டத் திருத்தத்தால் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது - மத்திய மின்சாரத்துறை செயலாளர் அலோக் குமார் விளக்கம்
 விசாரணையில் கண்ணப்பன் சிந்தாதிரிப்பேட்டைப் பகுதியில் வட்டி பணம் கொடுக்கும் தொழிலில் ஈடுப்பட்டு வருகிறார் என்பது தெரியவந்தது. மேலும் சம்பவத்தன்று மொபைல் போனை வாங்கி உரியவரிடம் ஒப்படைக்காததால் பொது இடத்தில் தனக்கு அவமரியாதை ஏற்பட்டதாகவும் அதனால் காவல் உதவி ஆய்வாளரை தாக்கியதாகவும் போலீசாரிடம் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.


இதனையடுத்து, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த பெரியமேடு போலீசார் கண்ணப்பனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாகன ஓட்டி தவறவிட்ட செல்போனை எடுத்து மறைத்து வைத்த நபரிடமிருந்து பறிமுதல் செய்து உரியவரிடம் ஒப்படைத்த காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய சம்பவமானது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Published by:Sankaravadivoo G
First published:

Tags: Chennai

அடுத்த செய்தி