• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தனியே செல்லும் பெண்களை நோட்டமிட்டு பாலியல் தொந்தரவு செய்த நபர் கைது..!

தனியே செல்லும் பெண்களை நோட்டமிட்டு பாலியல் தொந்தரவு செய்த நபர் கைது..!

கோப்புப் படம்

கோப்புப் படம்

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கைது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சென்னை பல்லாவரத்தில் தனியாக செல்லும் பெண்களை நோட்டமிட்டு, கத்தி முனையில் பாலியல் தொந்தரவு செய்துவந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    பல்லாவரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத ஒருவர் வழிமறித்துள்ளார்.

    கத்தியை காட்டி மிரட்டி, பாலியல் தொந்தரவு செய்ய முயன்றபோது, பெண்ணின் கூச்சலை கேட்டு மக்கள் கூடியதால், அந்த நபர் தப்பி ஓடினார்.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில், சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், திரிசூலம் பகுதியில் டிபன் கடை நடத்திவரும் ஆரோக்கியதாஸ் என்பவரை கைது செய்தனர்.

    மனைவியை பிரிந்து வாழ்ந்துவரும் அவர், சுமார் இரண்டு ஆண்டுகளாகவே தனியே பயணிக்கும் பெண்களுக்கு இதுபோன்ற பாலியல் தொந்தரவு அளித்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: