வீட்டில் மது விற்பனை செய்த நபர்... போலீசுக்கு பயந்து பதுங்கிய காட்சிகள் வெளியீடு

Youtube Video

திருச்சியில் சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்ட நபர் போலீசாருக்குப் பயந்து வீட்டைப் பூட்டிக் கொண்டு உள்ளே இருந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. போலீசார் வீட்டின் வெளியே காத்திருந்து அவரைக் கைது செய்தனர்.

 • Share this:
  திருச்சி மாவட்டம் வாத்தலை அருகே சட்டவிரோதமாக 3 பேர் மது விற்பதாக திருச்சி தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் புதன்கிழமை போலீசார், குணசீலம் அருகே உள்ள கல்லூர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டபோது அதே ஊரைச் சேர்ந்த 49 வயதான கோவிந்தராஜ், முசிறி ஆமூரைச் சேர்ந்த 58 வயதான மாசிலாமணி ஆகிய 2 பேர் சிக்கினர். ஒருவர் மட்டும் போலீசாரிடம் இருந்து தப்பிச் சென்று, ஒரு வீட்டிற்குள் புகுந்து வீட்டை வெளிப்புறம் பூட்ட வைத்து உள்ளே பதுங்கிக் கொண்டார்.

  அதைப் பார்த்த போலீசார் அங்கு சென்று உள்ளே பதுங்கியிருந்த நபரை எச்சரித்தனர். அதையடுத்து அவர் வீட்டிற்குள் இருந்தபடியே தகவல்கள் அளித்தார்.

  வீட்டின் உரிமையாளர் மூலம் சாவியைக் கொண்டு வரச் செய்த போலீசார் அதைத் திறந்து உள்ளே பதுங்கியிருந்த முசிறி குணசீலம் காந்தி நகரைச் சேர்ந்த 43 வயதான மருதையா என்பவரைக் கைது செய்தனர்.

  மேலும் படிக்க...Kasthuri Raja | ரூ.65 லட்சம் கடன் வாங்கிய விவகாரம்: கஸ்தூரிராஜா எழுதிய கடிதம், ரஜினியை எப்படி கட்டுப்படுத்தும்? கேள்வி எழுப்பிய நீதிபதிகள்

  அவர்களிடம் இருந்து 75 மதுபாட்டில்கள், 2,780 ரூபாய் ரொக்கம் மற்றும் 3 செல்போன்களைப் பறிமுதல் செய்தனர். அவர்களைக் கைது செய்து, வாத்தலை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசாரைக் கண்டதும் வீட்டிற்குள் பதுங்கிக் கொண்ட நபரை காத்திருந்து பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: