ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சிறையில் சிக்க வைத்ததற்கு பழிதீர்க்க தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் குண்டு வீச்சு!

சிறையில் சிக்க வைத்ததற்கு பழிதீர்க்க தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் குண்டு வீச்சு!

கைது செய்யப்பட்ட நபர்

கைது செய்யப்பட்ட நபர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சிறையில் சிக்க வைத்ததற்கு பழிதீர்க்க தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் குண்டு வீசியதாக கைதானவர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

மதுரை முன்னாள் தி.மு.க., மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வேலுச்சாமி, மதுரை அண்ணாநகர் ஒன்றாவது கிழக்கு தெருவில் வசித்து வருகிறார். கடந்த இரு நாட்களுக்கு முன்பு இருச்சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வேலுச்சாமி வீட்டில் வெடிகுண்டு வீசி சென்றனர்.

இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்திய நிலையில் பேட்டரி, வயர்களை பயன்படுத்திய எல்க்ட்ரானிக் குண்டை வேலுச்சாமி வீட்டில் வீசியது தெரியவந்தது. அது தொடர்பாக நடத்திய விசாரணையில் முன்னாள் எம்.எல்.ஏ., வேலுச்சாமியின் மகனை கொலை செய்த வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்று திரும்பிய மலைச்சாமி என்பவர் தன்னை வழக்கில் சிக்க வைத்த வேலுச்சாமியை பழிதீர்க்க திட்டம் தீட்டியுள்ளார்.

இதற்காக மதுரை மத்திய சிறையில் இருந்த போ து யாசின் முகமது அலி என்பவருடன் கூட்டு சதி செய்ததாக கூறப்படுகிறது. தனது மகன் உதவியோடு வேலுச்சாமி வீட்டில் குண்டு வீசியதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மலைச்சாமி மற்றும் அவரது மகனை போலீசார் கைது செய்தனர்.

எலக்ட்ரானிக் வெடிகுண்டு தயாரிக்க உதவியதாக சந்தேகிக்கப்படும் யாசின் முகமது அலியை போலீசார் தேடி வந்த நிலையில் அவர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார். மலைச்சாமியிடம் இதுவரை நடத்திய விசாரணையில் தன்னை கொலை வழக்கில் சிக்க வைத்து வாழ்க்கையை வீணடித்ததற்காக வேலுச்சாமியை பழிதீர்க்க நினைத்ததாகவும், அது குறித்து நேரடியாகவே வேலுச்சாமிக்கு மிரட்டில் விடுத்து பின்னர் குண்டு வீச்சு சம்பவத்தை செய்ததாகவும் யாசின் முகமது வாக்குமூலம் கொடுத்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

யாசின் முகமது அலியை  போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும் போது எல்க்ட்ரானிக் வெடிகுண்டு தயாரிக்கப்பட்டது எப்படி ? வேறு யாரேனும் அதன் பின்னணியில் உள்ளார்களா என்பது குறித்து தெரியவரும்.

Also see...

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Madurai