குளிக்கும்போது வீடியோ எடுத்து காதலிக்குமாறு மிரட்டிய இளைஞர்.. மாணவி தற்கொலை...

Youtube Video

அன்னூர் காவல் துறையினர் தற்கொலைக்குத் துாண்டியதாக வழக்குப் பதிவு செய்து, கௌதமை கைது செய்துள்ளனர்.

 • Share this:
  கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது மாணவி. அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த அவர், கடந்த 10-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார்

  மாணவியின் உறவினர்கள் அவரது பெற்றோரிடம் விசாரித்தபோது பகீர் தகவல்கள் வெளியாகின. மாணவி வீட்டின் அருகே வசிக்கும் உறவினரான காய்கறி வியாபாரி சம்பத்குமார் என்பவரின் மகனான, 20 வயது கெளதம் என்பவர் மாணவியை ஒருதலையாகக் காதலித்துள்ளார். மாணவி குளிக்கும்போது அதை வீடியோ எடுத்துள்ளார்; தன்னைக் காதலிக்கும்படியும், இல்லாவிட்டால் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டியு்ள்ளார்

  மேலும் தன்னிடம் நெருக்கமாக இருக்கும்படியும் தொந்தரவு செய்து வந்துள்ளார்.இதனால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

  இதனையடுத்து மாணவியின் உறவினர்கள், மாணவியின் பெற்றோரை அழைத்துக் கொண்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.அதன் அடிப்படையில் அன்னூர் காவல் துறையினர் தற்கொலைக்குத் துாண்டியதாக வழக்குப் பதிவு செய்து, கௌதமை கைது செய்துள்ளனர்.

   

  மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

  மாநில உதவிமையம்: 104

  சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
  Published by:Sankaravadivoo G
  First published: