MAN ARRESTED IN CHENNAI DUE TO HIS GIRL FRIEND COMMITEED SUICIDE FOR LOVE PROBLEM CRIME VIDEO VAI
சென்னையில் காதல் பிரச்னையில் இளம்பெண் தற்கொலை... காதலன் கைது
சென்னையில் காதல் பிரச்னையில், வங்கி பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தன்னை விட்டு விட்டு வேறொரு இளைஞருக்கு திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் அழுத்தம் கொடுத்ததால் தான் தற்கொலை செய்து கொண்டதாக காதலன் குற்றம்சாட்டியுள்ளார். இளம்பெண் தற்கொலைக்கு அவரது குடும்பம் தான் காரணமா? அல்லது காதலானா?
இளம் வங்கி ஊழியர் சரண்யா தற்கொலையில் என்ன நடந்தது என அவரது காதலன் ஐசக் மனோஜ்குமார் தனது தரப்பை வெளிப்படுத்தியி இருக்கிறார். கைவிட்டு செல்வதாக இருந்தால் ஏன் 2 முறை சரண்யா வீட்டிற்கு சென்று பெண் கேட்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார். மனோஜின் குற்றச்சாட்டுகள் என்ன?
சென்னை கீழ்ப்பாக்கத்தை அடுத்த டிபி சத்திரம் 14-வது தெருவைச் சேர்ந்தவர் 23 வயதான சரண்யா. அண்ணாநகரில் உள்ள தனியார் வங்கியில் வேலை செய்து வந்தார். சரண்யாவும் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ஐசக் மனோஜ்குமார் என்ற இளைஞரும் கடந்த ஓராண்டாகக் காதலித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை காலை 6.30 மணியளவில் சரண்யா மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.சரண்யாவின் தற்கொலைக்கு அவரது காதலன்தான் காரணம் என்றும் அவருக்குப் பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் சரண்யா உறவினர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.
இந்த நிலையில்தான், காதலன் மனோஜ், காதலி சரண்யா தற்கொலையின் பின்னணியில் நடந்தது பற்றி கூறியுள்ளார். திருமணத்திற்கு தான் 3 ஆண்டுகள் அவகாசம் கேட்ட நிலையில் சரண்யா தரப்பில் இந்த ஆண்டே திருமணம் நடத்த வேண்டும் என்ற அழுத்தம் கொடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.
சரண்யாவின் உறவினர் பெண் ஒருவரின் அண்ணனை அவருக்குத் திருமணம் செய்து வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதால் தான் சரண்யா மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.
சரண்யா தற்கொலை செய்த நாள் முதல் தனது வீடு உள்ள பகுதியில் கத்தியுடன் சில இளைஞர்கள் சுற்றித் திரிவதால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக போலீசாரிடம் புகாரளிக்கப் போவதாகவும் மனோஜ் கூறியிருந்தார். இந்நிலையில் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.