சீர்காழி அருகே காகங்கள் & நாய்கள் அடுத்தடுத்து உயிரிழப்பு - விஷம் வைத்தவர் கைது

கைது செய்யப்பட்ட ராஜ்

பூம்புகார் மீனவ கிராமத்தில் காகங்கள், நாய்களுக்கு விஷம் வைத்துக் கொள்ளப்பட்ட வழக்கில் அதே பகுதியை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.

 • Share this:
  மயிலாடுதுறை  மாவட்டம் பூம்புகார் மீனவ கிராமத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வானில் பறந்துகொண்டிருந்த 50க்கும் மேற்பட்ட காகங்கள் திடீரென கீழே விழுந்து அடுத்தடுத்து உயிரிழந்தன.

  இதேபோல மீனவர் காலனி பகுதியில் சுற்றித்திரிந்த மூன்று நாய்களும் தெருக்களில் இறந்து கிடந்தன. இதனை கண்ட மீனவ கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். விலங்குகளுக்கும் கொரோனா பரவுவதாக அப்போது செய்திகள் வெளி வந்த நிலையில், காகங்கள் மற்றும் நாய்கள் திடீரென இறந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

  இதுகுறித்து பூம்புகார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
  படிக்கஇந்தியாவில் ₹ 10 விலையில் கொரோனா உயிர் காக்கும் மருந்து


  படிக்கஇந்தியா - சீனா முப்படைகளின் பலம் என்ன..? ஓர் ஒப்பீடு


  கால்நடை துறை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இறந்துபோன காகங்கள் மற்றும் நாய்களுக்கு உடற்கூறு ஆய்வுகள்  செய்யப்பட்டது.

  இதன் முடிவில் காகங்கள் மற்றும் நாய்கள் விஷம் வைத்து கொள்ளப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து பூம்புகார் சுனாமி நகரை சேர்ந்த ராஜ் (35) என்பவரை கைது செய்து விசாரணை செய்ததில், தனது ஆடுகளை அப்பகுதியில் உள்ள நாய்கள் அடிக்கடி கடித்து வந்ததால் ஆத்திரத்தில் நாய்களுக்கு உணவில் விஷம் கலந்து வைத்தேன்.
  Also read... தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு... எங்கெங்கு தெரியுமா?
  மேலும் நாய்களுக்கு வைக்கப்பட்ட விஷம் கலந்த உணவை காகங்களும் உண்டதால் அவை இறந்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

   
  Published by:Vinothini Aandisamy
  First published: