• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அமைச்சர் ஜெயக்குமார் பெயரைப் பயன்படுத்தி பணமோசடி செய்ய முன்றவர் கைது - போலீசார் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

அமைச்சர் ஜெயக்குமார் பெயரைப் பயன்படுத்தி பணமோசடி செய்ய முன்றவர் கைது - போலீசார் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார்

சந்தேகமடைந்த துரைசாமி அமைச்சர் ஜெயக்குமாரின் அலுவலகத்திற்கு நேரடியாக போன் செய்து கேட்டபோது, அமைச்சர் ஜெயகுமார் பேசவில்லை என உறுதியானது.

  • Share this:
அமைச்சர் ஜெயக்குமாரின் பெயரைப் பயன்படுத்தி பணமோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். 

சென்னை கிண்டி சிப்காட் பகுதியில் சிறு தொழிலகம் நடத்தி வருபவர் துரைசாமி(61). இவருக்கு நேற்று மாலை போன் கால் வந்துள்ளது. அதில் பேசிய நபர், அமைச்சர் ஜெயக்குமார் பேசுவதாகவும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி நலப்பணிகள் செய்ய இருப்பதால் ரூபாய் 80,000 வேண்டும் என கூறியுள்ளார். ரூபாய் 80,000 தர முடியாது என்று கூறிய துரைசாமி பின்னர் ரூபாய் 30,000 தருவதாக ஒப்புக் கொண்டுள்ளார்.

பின்னர் எதிர்முனையில் பேசிய நபர் வங்கி கணக்கு அனுப்பி வைத்துள்ளார். அதனை சோதனை செய்து பார்த்தபோது முகமது ரபிக் என்பவரது பெயரில் வங்கி கணக்கு இருப்பது தெரியவந்தது. சந்தேகமடைந்த துரைசாமி அமைச்சர் ஜெயக்குமாரின் அலுவலகத்திற்கு நேரடியாக போன் செய்து கேட்டபோது, அமைச்சர் ஜெயகுமார் பேசவில்லை என உறுதியானது.

அமைச்சர் பெயரை சொல்லி யாரோ மோசடியில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து  கிண்டி காவல் நிலையத்தில் துரைசாமி புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வங்கி கணக்கு எண்ணை வைத்து வியாசர்பாடியை சேர்ந்த முகமது ரபிக்(50) என்பவரை கைது செய்தனர்.

போலீசாரின் விசாரணையில் சென்னை, கோவை, திருச்சி போன்ற இடங்களில் இதேபோல் போன் செய்து பல அமைச்சர்களின் பெயரை கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக இவர் மீது 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட முகமது ரபிக்கிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: தினமும் வாழை இலையில் மதிய உணவு... அசத்தும் புதுச்சேரி அரசு தொடக்கப் பள்ளி...!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: