Home /News /tamil-nadu /

மம்தா பானர்ஜி - சோசலிசம் திருமணம் இன்று.. நெட்டிசன்களின் கவனம் பெற்ற கம்யூனிசவாதி இல்ல திருமணம்

மம்தா பானர்ஜி - சோசலிசம் திருமணம் இன்று.. நெட்டிசன்களின் கவனம் பெற்ற கம்யூனிசவாதி இல்ல திருமணம்

மம்தா பானர்ஜி - சோசலிசம் திருமணம்

மம்தா பானர்ஜி - சோசலிசம் திருமணம்

மோகன், கம்யூனிஸ்ட் கட்சியில் சிறு வயது முதலே தன்னை இணைத்துக்கொண்டு, மக்கள் பணியாற்றி வருகிறார்.

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர்  மோகன். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளராக உள்ளார். இவருடைய தந்தை அழகப்பன், அவருடைய தந்தை வழியில் தன்னை கம்யூனிஸ்ட் கட்சியில் சிறு வயது முதலே இணைத்துக்கொண்டு அப்பகுதியில் பல்வேறு பிரச்சனைகளுக்காக போராடி வந்திருக்கிறார். மோகனின் தாயார் கமலா,  அனைத்திந்திய மாதர் சங்கத்தில் நிர்வாகியாக பல ஆண்டு காலம் செயல்பட்டு  வந்துள்ளார்.

தாத்தா மற்றும் தந்தை அழகப்பன் வழியில் மோகன்,  கம்யூனிஸ்ட் கட்சியில் சிறு வயது முதலே தன்னை இணைத்துக்கொண்டு, மக்கள் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தனக்கு பிறந்த மூன்று மகன்களுக்கும் கம்யூனிசம், லெனினிசம்,  சோசலிசம் எனவும், தனது பேரனுக்கு  மார்க்சிசம் எனவும் சித்தாந்த  பெயர்களைச் சூட்டி உள்ளார்.

மூத்த மகன் கம்யூனிசம் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். அடுத்த இரண்டு மகன்களும் பி.காம் படித்து முடித்து, வீட்டிலேயே வெள்ளி கொழுசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  மேலும் இரண்டாவது மகனான லெனினிசம்,  பளுதூக்கும் வீரராக,  மாநில அளவில் பல்வேறு பரிசுகளை பெற்றதோடு,  கடந்த 2011 மற்றும் 12 ஆண்டுகளில் தமிழகத்தின் இரும்பு மனிதன்(strong man) என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்.

மணமக்கள்


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கம்யூனிசம் மற்றும் லெனினிசம் ஆகிய இரு மகன்களுக்கும் ஏற்கனவே திருமணம் ஆன நிலையில்,  எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது மகனான சோசலிசத்திற்கு திருமணம் நடைபெற உள்ளது.  மூன்றாவது மகன் சோசலிசம்,  அவரது மாமன் பழனிச்சாமியின் மகளான  மம்தா பானர்ஜியை  திருமணம் செய்ய உள்ளார். பழனிச்சாமி  காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால்  தனது மகளுக்கு மம்தா பானர்ஜி என பெயர் வைத்துள்ளார்.

Also Read: பிரபல ரவுடி காக்காத்தோப்பு பாலாஜி கைதில் மவுனம் காக்கும் போலீஸ்.. கை கால் முறிவுடன் மருத்துவமனையில் அனுமதி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தலைமையில் சேலம் காட்டூர் கிராமத்தில் உள்ள மோகன் இல்லத்தில் கொரானா ஊரடங்கு  விதிமுறைப்படி குறைந்த உறவினர்களோடு திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணத்திற்காக அழைப்பிதழ் எதுவும் அச்சடிக்கப்படவில்லை. மாறாக ஜனசக்தி இதழில் விளம்பரமாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பர அழைப்பிதழ் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது குறித்து மோகன் கூறும் போது, கடந்த 1992 ஆம் ஆண்டு ரஷ்யாவில் கம்யூனிசம் வீழ்ந்துவிடும் என்று சொல்லப்பட்ட காலகட்டத்தில் தான்  முதல் ஆண் குழந்தை பிறந்தது. அப்போது  எனது மனைவி கர்ப்பமாக இருக்கும்போதே, பெயர் முடிவு  செய்து, கம்யூனிசம்,  எப்பொழுதுமே வீழாது  என உறுதிபூண்டு தனது மகனுக்கு கம்யூனிசம் என பெயர் சூட்டியதாக  நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

Also Read: மூட நம்பிக்கையால் 10 ஆண்டுகள் மூடப்பட்டிருந்த எம்.எல்.ஏ. அலுவலகம் மீண்டும் திறப்பு!

இதனை தொடர்ந்து பிறந்த  இரண்டு குழந்தைகளுக்கும் ஒருவருக்கு லெனினிசம் என்றும் கடைசி மகனுக்கு சோசலிசம் என்றும் பெயரிட்டதாக கூறும் மோகன் தனது பேரனுக்கு மார்க்சிசம் என பெயர் சூட்டி அடுத்த தலைமுறைக்கும் தொடங்கி வைத்திருக்கிறேன் என  பெருமையோடு தெரிவித்தார்.

அதே நேரத்தில் இந்த பெயர்கள் இந்த ஊருக்கு புதிதல்ல. ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, இந்த ஊரில் மாஸ்கோ, வியட்நாம், செக்கோஸ்லோவாகியா, வெண்மணி, நேதாஜி, ரஷ்யா, ருமேனியா என பல தோழர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைத்துள்ளார்கள் என்கிறார் மோகன்.

இதுமட்டுமல்லாமல் அடுத்து இவரது மகன்களுக்கு பெண் குழந்தைகள் பிறந்தால் மார்க்சியா, கியுபாயிசம் உள்ளிட்ட பெயர்களை சூட்ட முடிவு செய்து வைத்திருப்பதாகவும் தெரிவிக்கிறார் மோகன்.

மோகனின் மகன்கள்  கூறும் போது,  பள்ளிப்பருவத்தில் சகமாணவர்கள், தங்களின் பெயரை ஏளனமாகவும், கேலியாகவும் பார்த்தனர். பின்னாளில் பெயருக்கான காரணம் தெரிந்ததாலும், தனித்துவமாக இருப்பதாலும் மிக பெருமையாக இருப்பதாகவும், தற்போது இந்த அழைப்பிதழ் இணையத்தில் பரவியதால் ஏராளமான நண்பர்களும், தோழர்களும், ஊடகவியலாளர்களும் தங்களை தொலைபேசியில் தொடர்புகொள்வது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவிக்கின்றனர். தந்தை வழியில் தங்கள் வாரிசுகளுக்கும் இது போன்ற பெயர்களையே சூட்ட உள்ளதாக தெரிவித்தனர்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published:

Tags: Communist Party, Mamata banerjee, Marriage, Salem

அடுத்த செய்தி