தமிழ் மக்கள் புலிகளைப் போன்றவர்கள்! மம்தா பானர்ஜி புகழாரம்

நான் இந்தியராக இருக்கலாம், ஆனால், மேற்கு வங்கத்தில் பிறந்திருக்கிறேன். ஸ்டாலின் இந்தியராக இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டில் பிறந்திருக்கிறார். நமக்கென்று தாய்மொழி இருக்கிறது. நமக்கென்று நிலம் இருக்கிறது.

news18
Updated: August 7, 2019, 7:53 PM IST
தமிழ் மக்கள் புலிகளைப் போன்றவர்கள்! மம்தா பானர்ஜி புகழாரம்
மம்தா பானர்ஜி
news18
Updated: August 7, 2019, 7:53 PM IST
நாம் இந்தியராக இருந்தாலும், நமக்கென்று தனித்த அடையாளங்கள் இருக்கின்றன. நமக்கென்று ஒரு மொழி இருக்கிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கருணாநிதியின் சிலைதிறப்பு விழாவில் பங்கேற்பதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சென்னை வந்துள்ளார். சென்னை கோடம்பாக்கத்திலுள்ள முரசொலி அலுவலகத்தில் கருணாநிதி சிலையை திறந்துவைத்த அவர், அதன்பிறகு, ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

அப்போது பேசிய அவர், ‘கருணாநிதி மறைந்தாலும் இன்று நம் இதயங்களில் அவர் வாழ்கிறார். தமிழகத்தின் தந்தை போன்று விளங்கியவர் கருணாநிதி. கருணாநிதி எப்போதும் கூட்டாச்சி தத்துவத்துக்கு குரல் கொடுத்தவர். கருணாநிதியின் வழியில் நின்று நாட்டில் நிலவும் சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடுவோம். தமிழகத்தின் மிகப்பெரும் அடையாளம் அவர். அந்த அடையாளம் தான் வரலாறு. வரலாறு என்று மக்கள் மனதில் இருக்கும்.


கருணாநிதி சிலை திறப்பு


நாம், காந்தி, அம்பேத்கர், நேதாஜி, எம்.ஜி.ஆர், கருணாநிதியை ஆகியோரை மறக்க முடியாது. ஏனென்றால், அவர்கள் மக்களுக்காக உழைத்தவர்கள். தமிழ்நாடு குறித்து ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்றால் தமிழ்நாட்டு மக்களை நினைவில்கொள்ள வேண்டும். மேற்கு வங்கம் குறித்து ஒருமுடிவு எடுக்க வேண்டும் என்று மேற்கு வங்க மக்களை நினைவில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாநிலத்தைப் பற்றிய முடிவுகளை அந்த மாநில மக்களின் ஒப்புதலுடன் எடுக்கவேண்டும்.

நீங்கள் கேட்கலாம் உங்களுடைய தமிழ் உச்சரிப்பு சரியில்லை. பின்னர், எதற்காக வணக்கம் என்று கூறுகிறீர்கள் என்று, இதுதான் என்னுடைய தமிழ் வார்த்தை. அந்த வார்த்தை நான் நேசிக்கிறேன். அதைக் கூற விரும்புகிறேன். மேற்குவங்கத்துக்கும், தமிழ்நாட்டுக்கு என்ன வித்தியாசம்? நேதாஜியை எடுத்துக் கொள்ளுங்கள் அவர் தமிழ்நாட்டுக்காக உழைத்திருக்கிறார். அவர், மேற்கு வங்கத்தில் எவ்வளவு பிரபலமோ, அதேபோல தமிழகத்திலும் மிகவும் பிரபலம்.

Loading...

தமிழ்நாட்டுக்கும் மேற்குவங்கத்துக்கு ஒற்றுமை உண்டு. தமிழ்நாட்டிலும் 2021-ல் தேர்தல். மேற்கு வங்கத்திலும் 2021-ல் தேர்தல். கருணாநிதி எப்போதும் கூட்டாச்சி முறையை விரும்பினார். அவர், எப்போதும் மாநில சுயாட்சிக்காக போராடினார். நான் இந்தியராக இருக்கலாம், ஆனால், மேற்கு வங்கத்தில் பிறந்திருக்கிறேன்.

ஸ்டாலின் இந்தியராக இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டில் பிறந்திருக்கிறார். நமக்கென்று தாய்மொழி இருக்கிறது. நமக்கென்று நிலம் இருக்கிறது. நமக்கென்று தனித்த அடையாளம் இருக்கின்றது. அதனைப் பாதுகாக்க வேண்டும். நான் எப்போதும் தமிழ் நண்பர்களை மிகவும் மரியாதையுடன் பார்க்கிறேன். ஏனென்றால் நீங்கள் மிகவும் தைரியமானவர்கள். துணிச்சல் மிக்கவர்கள். அடுத்தமுறை, நான் தமிழகம் வரும் சிறப்பாக தமிழ் பேசுவேன்.

கருணாநிதி சிலையை திறந்துவைக்க என்னை அழைத்ததற்கு நன்றி. நான், கருணாநிதி சிலை திறந்ததை நான் என்றும் மறக்க மாட்டேன். இளைஞர்கள் நீங்கள்தான் போராட வேண்டும். எதைக் குறித்தும் அச்சம் கொள்ளாதீர்கள். மனிதத்தைப் பற்றி மட்டும் கவலைக் கொள்ளுங்கள்.. உங்கள் தாய் நிலத்தைப் பற்றி பற்றி மட்டும் கவலைக் கொள்ளுங்கள். இந்த தாய் நிலம் நமக்கு மட்டுமானது. யாரும் நம்மை தனிமைப் படுத்த முடியாது.

நம்முடைய கருத்தியல், நம்முடைய அடையாளம் ஆகியவற்றைப் பற்றி பாதுகாத்துக்கொள்ளுங்கள். வணக்கம், வணக்கம், வணக்கம். வழக்கமாக, ஜெய்ஹிந்த், ஜெய்பங்களா என்று கூறுவேன். இந்த ஜெய் தமிழ்நாடு என்கிறேன்’ என்று பேசினார்.

Also see:

First published: August 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...