உதயநிதியின் பெயருக்கு பெங்காலியில் விளக்கம் கூறிய மம்தா! ரசித்துப் பார்த்த மு.க.ஸ்டாலின்

சென்னை கோடம்பாக்கத்திலுள்ள முரசொலி அலுவலகத்தில் கருணாநிதி சிலையை திறந்துவைத்த அவர், பின்னர் மெரினா கடற்கரையிலுள்ள கருணாநிதி நினைவிடத்துக்கு சென்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

news18
Updated: August 7, 2019, 8:52 PM IST
உதயநிதியின் பெயருக்கு பெங்காலியில் விளக்கம் கூறிய மம்தா! ரசித்துப் பார்த்த மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி
news18
Updated: August 7, 2019, 8:52 PM IST
தி.மு.கவின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பெயருக்கு பெங்காலியில் என்ன அர்த்தம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விளக்கம் அளித்தார்.

கருணாநிதியின் சிலைதிறப்பு விழாவில் பங்கேற்பதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சென்னை வந்துள்ளார். சென்னை கோடம்பாக்கத்திலுள்ள முரசொலி அலுவலகத்தில் கருணாநிதி சிலையை திறந்துவைத்த அவர், பின்னர் மெரினா கடற்கரையிலுள்ள கருணாநிதி நினைவிடத்துக்கு சென்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு, ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற கருணாநிதி நினைவு தின பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டனார்.

அந்தக்கூட்டத்தில் பாண்டிச்சேரி முதல்வர் நாராயணசாமி, வைரமுத்து, தி.க.தலைவர் கி.வீரமணி ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய அவர், ‘கருணாநிதி தமிழகத்தின் தந்தையைப் போன்றவர். அவர் மாநில சுயாட்சிக்காக தொடர்ந்து போராடினார். தி.மு.க வின் சின்னம் உதய சூரியன்.


மு.க.ஸ்டாலின் மிகவும் புத்தியசாலி. அவரது மகனும் உதயநிதி ஸ்டாலின் என்று பெயர் வைத்துள்ளார். உதய் என்றால் பெங்கால் மொழியில் ரைசிங்(rising) என்று அர்த்தம்’ என்று விளக்கமளித்தார். மம்தாவின் பேச்சைக் கேட்டு, மு.க.ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் சிரித்தனர்.

Also see:

First published: August 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...