ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சுற்றுலா பயணிகள் அதிக வரும் இடங்களில் தாஜ்மஹாலை பின்னுக்கு தள்ளிய மாமல்லபுரம்!

சுற்றுலா பயணிகள் அதிக வரும் இடங்களில் தாஜ்மஹாலை பின்னுக்கு தள்ளிய மாமல்லபுரம்!

மாமல்லபுரம்

மாமல்லபுரம்

இந்தியா வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் பார்க்கும் இடமாக இருந்த  காதல் சின்னம் தாஜ்மஹாலை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளது கலைச்சிற்பங்களின் சின்னமாய் கம்பீரமாய் நிற்கும் மாமல்லபுரம்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Mamallapuram (Mahabalipuram), India

  தமிழகத்தின் தலைநகரம் சென்னைக்கு மிக அருகில் உள்ளது மாமல்லபுரம். கிழக்கு கடற்கரைச் சாலையில் பயணித்தால் 60 கிமீ தூரத்தில் உள்ளது இந்த அழகான கிராமமும் அல்லாது நகரமும் அல்லாத மாமல்லபுரம். மத்திய  சுற்றுலாத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி,2021-22 ஆம் ஆண்டில் இந்தியா வந்த வெளிநாட்டு பயணிகளில் 1,44,984 பேர் மாமல்லபுரத்தை பார்வையிட்டுள்ளனர். ஆனால் தாஜ்மகாலை பார்த்தவர்கள் எண்ணிக்கை 38 ஆயிரத்து 922 பேர் மட்டும் தான்.

  வரலாற்று சிறப்புமிக்க இடம் என்பதால் இங்கு வருவதற்கு முடிவு செய்தேன். இங்குள்ள  கட்டிடக்கலை, சிற்பங்கள் ஆச்சரியமாக உள்ளன. உண்மையிலேயே இங்கு வந்து பார்த்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். பல்லவ மன்னர்கள் காலத்தில் ஆயிரக்கணக்கான சிற்பிகளை கொண்டு உருவாக்கப்பட்ட சிற்ப நகரம் தான் இது.

  இத்தகைய சிறப்புகள் பொருந்தியதால் தான் இந்த இடத்தை 1984-ஆம் ஆண்டு உலகப் பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்தது. கடற்கரை கோவில், ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல், கிருஷ்ண மண்டபம், மகிஷாசூரமர்த்தினி மண்டபம், பழைய கலங்கரை விளக்கம் ஆகியவற்றில் உள்ள கலைநுட்பம் வெளிநாட்டினரை வியக்க வைக்கின்றன.

  அா்ஜுனன் தபசு என்ற சிற்பத் தொகுப்பில் உள்ள மான்களின் அழகை, முன்னாள் பிரதமா் இந்திராகாந்தி 1976-ஆம் ஆண்டு மாமல்லபுரம் வந்த போது பாா்த்து ரசித்தாா். மான்களின் சிற்பத்தை நம் நாட்டின் 10 ரூபாய் நோட்டில் அச்சிட்டு மாமல்லபுரத்துக்கு பெருமை சோ்த்தாா்.

  சீன அதிபர் ஜின்பிங் இந்திய பிரதமர் மோடி இடையிலான 2019ம் ஆண்டு நடந்த சந்திப்பு, நடப்பாண்டு கோலாகலமாக நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி போன்றவையும் மாமல்லபுரம் வெளிநாட்டவரின் கவனத்தை ஈர்த்தமைக்கு முக்கிய காரணிகள். உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வருகை அதிகரிப்பால் சுற்றுலா சார்ந்த பொருளாதார வளர்ச்சி இங்கு அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டினர்களில் 13%பேர் தாஜ்மஹாலை பார்த்துள்ளனர் என்றால், 45.5% பேர் மாமல்லபுரத்தை பார்த்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Vijay R
  First published:

  Tags: Mamallapuram