மோடி, சீன அதிபர் வருகை! உரிமத்துடன் துப்பாக்கி வைத்திருப்பவர்களுக்கு காவல்துறை உத்தரவு

மோடி, சீன அதிபர் வருகை! உரிமத்துடன் துப்பாக்கி வைத்திருப்பவர்களுக்கு காவல்துறை உத்தரவு
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் மோடி
  • News18
  • Last Updated: October 10, 2019, 3:02 PM IST
  • Share this:
மாமல்லபுரத்திற்கு பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் வருகையை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாமல்லபுரத்துக்கு, சீன அதிபர் ஜின்பிங்குடன் பிரதமர் மோடி இந்த மாதத்தில் பேச்சு நடத்த உள்ளார். யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்டுள்ள மாமல்லபுரத்தின் சிற்பங்கள் குறித்தும் சிறப்புகள் குறித்தும் சீன அதிபருக்கு விளக்கப்பட உள்ளது. இரு தலைவர்களும் தங்கவுள்ள கோவளம் தாஜ் நட்சத்திர விடுதி, சுற்றிப் பார்க்க இருக்கும் மாமல்லபுரம் அர்ஜுனன் தபசு, ஐந்து ரதம், கலங்கரை விளக்கம், கடற்கரைக் கோயில் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

கடந்த 2017-ம் ஆண்டு குஜராத் மாநிலத்துக்கு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே வந்தபோது, மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமம், சித்தி சையத் மசூதி உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று, பிரதமர் மோடி உற்சாகப்படுத்தினார். அப்போது பல பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. அதேபோல், மாமல்லபுரத்திலும் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என கூறப்படுகிறது.


இந்நிலையில், மாமல்லபுரம் கடற்கரைக்குச் செல்லும் சாலையில் இருக்கும் கடைகள் காலி செய்யப்பட்டு வருகின்றன. இதனிடையே, வரும் 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை கிழக்கு கடற்கரை சாலைக்கு பதிலாக, பழைய மகாபலிபுரம் சாலையை பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ள போலீசார், காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் உரிமத்துடன் துப்பாக்கி வைத்திருப்பவர்கள், அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டுள்ளனர்.

Also see:

First published: October 1, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading