சீன அதிபரையும், பிரதமர் மோடியையும் தமிழக மக்கள் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்: முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

சீன அதிபரையும், பிரதமர் மோடியையும் தமிழக மக்கள் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்: முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்
எடப்பாடி பழனிசாமி
  • News18
  • Last Updated: October 10, 2019, 3:01 PM IST
  • Share this:
மாமல்லபுரம் வரவுள்ள பிரதமர் மோடிக்கும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கும் தமிழக மக்கள் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இரு நாட்டு ஆளுமைகளின் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெறுவது தமிழ்நாட்டின் மதிப்பை உலக அரங்கில் உயர்த்தியுள்ளது எனக்கூறியுள்ளார்.

அதோடு யுனெஸ்கோ உலக பாரம்பரிய மையமான மாமல்லபுரத்தில் இந்த சந்திப்பு நடைபெறுவது பண்டைய வரலாற்றின் தொடர்ச்சியாகவே அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


மேலும் இந்நிகழ்விற்கு மாமல்லபுரத்தை தேர்வு செய்ததற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், தமிழக மக்கள் சார்பாகவும், தமிழ்நாடு அரசின் சார்பாகவும் இரு உலகத்தலைவர்களையும் வரவேற்பதாகவும் கூறியுள்ளார்.

First published: October 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்