மாமல்லபுரத்தை தேர்வு செய்தது மோடியே.. - வெளியுறவுத்துறை

மாமல்லபுரத்தை தேர்வு செய்தது மோடியே.. - வெளியுறவுத்துறை
  • Share this:
சீன அதிபருடன் சந்திப்பு நடைபெறும் இடமாக மாமல்லபுரத்தை தேர்வு செய்தது பிரதமர் மோடியே என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது

மாமல்லபுரத்தில் நடைபெறும் பிரதமர் மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையிலான சந்திப்பு குறித்து வெளியுறவுத்துறை சில குறிப்புகளை வெளியிட்டுள்ளது. அதில் சந்திப்பு நடைபெறும் இடமாக மாமல்லபுரத்தை தேர்வு செய்தது பிரதமர் மோடியே என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்புக்கான பணிகள் கடந்த ஜுன் மாதமே தொடங்கப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன அதிபர் ஜின்பிங் உடன் 90 அதிகாரிகள் வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


பிரதமர் மோடியும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் ஒட்டுமொத்தமாக 3 மணி நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவர்.

First published: October 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்