முகப்பு /செய்தி /தமிழ்நாடு / செயல்படாத நிலையில் ஏ.டி.எம் இயந்திரம்! மாலை போட்டு எதிர்ப்பை வெளிப்படுத்திய இளைஞர்கள்

செயல்படாத நிலையில் ஏ.டி.எம் இயந்திரம்! மாலை போட்டு எதிர்ப்பை வெளிப்படுத்திய இளைஞர்கள்

  • 1-MIN READ
  • Last Updated :

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் செயல்பட்டு வரும் பாரத ஸ்டேட் வங்கி அருகில் உள்ள எஸ்.பி.ஐ ஏ.டி.எம் சரியாக வேலை செய்யவில்லை. இங்கு பணம் எடுக்க மற்றும் போட என இரண்டு முறைகளில் பயன்படும் வகையில் மிஷின்கள் பொருத்தப்பட்டுள்ளன. கடந்த ஒரு வருடமாகவே சரியாக பராமரிப்பு இன்றி அடிக்கடி வேலை செய்யமால் இருந்து வந்துள்ளது.

பணம் எடுக்க போனால் பணம் இல்லை. அக்கவுண்டில் பணம் போட போனாலும் போட முடியவில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாகி வந்தனர். இதனிடையே தே.மு.தி.க நகரச் செயலாளரான பால்நல்லதுரை என்பவர் ஒரு மாலை வாங்கி வந்து ஏடிஎம் இயந்திரத்திற்கு கண்ணீர் அஞ்சலி போல் மாலை அணிவித்துள்ளார்.

இது குறித்து பால் நல்ல துரை கூறும்போது, வங்கி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்காகத்தான் இன்று மாலை ஒன்று வாங்கி நிரந்தரமாக சரி செய்து இயங்குவதற்கும் அல்லது நிரந்தரமாக மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இப்படி செய்ததாக கூறியுள்ளார்.

இதுகுறித்து வங்கி மேலாளரிடம் கேட்டபோது ஏடிஎம் மையத்தில் சில நபர்கள் தினமும் பழைய ரூபாய் நோட்டுகளை பணம் செலுத்தும் இயந்திரத்தில் போடுகின்றனர். தினமும் காலை சரிசெய்தாலும் அன்றைய தினமே மாலைக்குள் யாராவது ஒருவர் செய்கிற தவறினால் மீண்டும் ஏடிஎம் பழுதாகி விடுகிறது என தெரிவித்தார்.

Also see:

First published:

Tags: ATM, ATM services, SBI ATM