முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ''2024 தேர்தலிலும் திமுக, காங்கிரஸ் கூட்டணி தொடரும்..'' முக ஸ்டாலின் பிறந்தநாள் விழா மேடையில் உறுதி செய்த காங். தலைவர்!

''2024 தேர்தலிலும் திமுக, காங்கிரஸ் கூட்டணி தொடரும்..'' முக ஸ்டாலின் பிறந்தநாள் விழா மேடையில் உறுதி செய்த காங். தலைவர்!

மல்லிகார்ஜூனா கார்கே

மல்லிகார்ஜூனா கார்கே

தமிழ்நாடு எப்போதும் சிறந்த மாநிலம். நல்ல தலைவர்கள் எழுத்தாளர்கள் அரசியல் தலைவர்களை உருவாக்கிய மாநிலம் - கார்கே

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

திமுக, காங்கிரஸ் கூட்டணி 2004, 2009 ஆகிய ஆண்டுகளில் மாபெரும் வெற்றி பெற்றது. அதேபோல் 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் திமுக காங்கிரஸ் கூட்டணி தொடரும், வெற்றிபெறும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்க காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

அதில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, “மரியாதைக்குரிய முதலமைச்சர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை இங்கு பல்வேறு தலைவர்கள் கொண்டாடுகிறார்கள். எனக்கு 81 வயது, உங்களுக்கு 70 வயது தான் ஆகிறது, அதனால் நான் உங்களை வாழ்த்தும் உரிமை எனக்கு உண்டு. நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும். He is the worthy son of the worthy father.

தமிழ்நாடு எப்போதும் சிறந்த வளர்ச்சி பெற்று வரும் மாநிலம். நல்ல தலைவர்கள் எழுத்தாளர்கள் அரசியல் தலைவர்களை உருவாக்கிய மாநிலம். திமுக காங்கிரஸ் இணைந்து பல தேர்தல்களை சந்தித்துள்ளது.

திமுக, காங்கிரஸ் கூட்டணி 2004, 2009 ஆகிய ஆண்டுகளில் மாபெரும் வெற்றி பெற்றது. அதேபோல் 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் திமுக காங்கிரஸ் கூட்டணி தொடரும், வெற்றிபெறும். பாஜக பிரிவினையை ஏற்படுத்தி வெற்றி பெற்று வருகிறது. பரூக் அவர்களே பிரதமர் யார் என்பது முக்கியமில்லை. யார் தலைமை தாங்குவது என்பது முக்கியமில்லை. அனைவரும் ஒன்றிணைந்து ஜனநாயகத்தை காப்பாற்ற அரசியலமைப்பை காப்பாற்ற போராட வேண்டும் அதுதான் முக்கியம்” என தெரிவித்தார்.


First published:

Tags: CM MK Stalin, DMK Alliance, Mallikarjun Kharge