Home /News /tamil-nadu /

தொழிலாளர்கள் வெளியேற்றத்தால் மலேசியாவில் தொழில் நஷ்டம், பொருளாதார மந்தநிலை - பெரம்பலூரில் மலேசிய தூதர் தகவல்

தொழிலாளர்கள் வெளியேற்றத்தால் மலேசியாவில் தொழில் நஷ்டம், பொருளாதார மந்தநிலை - பெரம்பலூரில் மலேசிய தூதர் தகவல்

மலேசியா

மலேசியா

Perambalur District : கொரோனோ தொற்று காரணமாக மலேசிய நாட்டில் பணியாற்றிய சுமார் 2 மில்லியன் தொழிலாளர்கள் சொந்த நாட்டிற்கு திரும்பி விட்டனர். இதனால் மலேசியா நாட்டில் பெரும்பாலான தொழில்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    மலேசியாவில், கொரோனோ ஊரடங்கிற்கு வரும் ஏப்ரல் மாதம் 1ம்தேதியில் இருந்து விலக்களிக்கப்படவுள்ளதாக, இந்தியாவிற்கான மலேசிய தூதர் டத்தோ ஹிதயாத் அப்துல் ஹமீது பெரம்பலூரில் தெரிவித்தார்.

    பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள இந்திய  நாட்டிற்கான மலேசிய தூதரும், மலேசிய நாட்டின் ஹை கமிஷனருமான, டத்தோ ஹிதயாத் அப்துல் ஹமீது, பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியிலுள்ள இந்திய மற்றும் மலேசியா நாட்டின் தொழிலதிபர் டத்தோ பிரகதீஷ் குமார் என்பவர் இல்லத்தில் ஓய்வு எடுத்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த, அவர்,  கொரோனோ தொற்று காரணமாக மலேசிய நாட்டில் பணியாற்றிய சுமார் 2 மில்லியன் தொழிலாளர்கள் சொந்த நாட்டிற்கு திரும்பி விட்டனர். இதனால் மலேசியா நாட்டில் பெரும்பாலான தொழில்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இதனால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதோடு, மட்டுமின்றி பல்வேறு தொழில் நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மலேசியாவில் பொருளாதாரத்தில் மந்த நிலையும் நிலவியது.

    இந்நிலையில் மலேசிய அரசாங்கம் வருகின்ற ஏப்ரல் மாதம் 1.ம் தேதி முதல் கொரோனோ ஊரடங்கிற்கு தளர்வு அறிவித்துள்ளது. இந்த தளர்வினை தொடர்ந்து அங்கு மீண்டும் சகஜ நிலை திரும்பும், மலேசியாவை விட்டு வெளியேறிய தொழிலாளர்கள் அனைவரும் மீண்டும் மலேசியாவிற்கு திரும்பவுள்ளனர். அதே போல சர்வதேச விமான சேவையும் தொடங்கப்படவுள்ளது.

    ALSO READ |  விவசாய நிலத்தில் உயர்மின் கோபுரங்கள்... நஷ்டஈடு கேட்டு விவசாயிகள் போராட்டம்
    இதனால் அனைத்து நிறுவனங்கள் தொழிற்சாலைகள் வழக்கம்போல செயல்படும் என்றார். தொடர்ந்து பேசிய அவர் உக்ரைன்- ரஷ்யா போரினால் மலேசியாவிற்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. மலேசியாவில் படிக்கும் ஏராளமான இந்திய மாணவர்கள் அங்கேயேதான் இருக்கிறார்கள். அவர்கள் இந்திய நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட வில்லை. எனவே  மலேசியாவில் படிக்கும் இந்திய மாணவர்களை பற்றி அச்சப்படத் தேவையில்லை என்று தெரிவித்தார்.


    செய்தியாளர் : ஆர்.ராஜவேல் பெரம்பலூர்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Corona, Malaysia

    அடுத்த செய்தி