மோடிக்காக களமிறங்கிய பத்திரிகையாளர் மாலன்! கேள்விகளால் துளைத்தெடுத்த நிருபர்கள்

ஐந்து ஆண்டுகளில் பெண்களின் வளர்ச்சிக்காக இலவச கேஸ் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

மோடிக்காக களமிறங்கிய பத்திரிகையாளர் மாலன்! கேள்விகளால் துளைத்தெடுத்த நிருபர்கள்
மாலன்
  • News18
  • Last Updated: April 15, 2019, 7:21 PM IST
  • Share this:
பா.ஜ.கவுக்கு ஆதரவாக செய்தியாளர்களைச் சந்தித்த பத்திரிகையாளர் மாலன், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் பாதியிலேயே செய்தியாளர் சந்திப்பை முடித்தார். 

சென்னையில் செய்தியாளர் மாலன், ஓய்வு பெற்ற காவல்துறை டி.ஜி.பி பாலசந்தர், பதிப்பாளர் பத்ரி, தமிழறிஞர் சரஸ்வதி உள்ளிட்ட பலர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய மாலன், ’அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். மீண்டும் மோடி ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை மக்களிடம் எடுத்துரைக்க இருக்கிறோம்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் பெண்களின் வளர்ச்சிக்காக இலவச கேஸ் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது. மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியை இந்தியா எட்டியுள்ளது. சீனாவைக் காட்டிலும் அதிக வளர்ச்சியை இந்தியா பெற்றுள்ளது என பல விசயங்களை முன்வைத்தார்.


இதையடுத்து நீங்கள் அனைவரும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக பேச காரணமென்ன? பா.ஜ.க தூண்டுதலா என செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர்.

நான்கு கேள்விகள் மட்டுமே கேட்கலாம் இத்தோடு செய்தியாளர் சந்திப்பை முடித்துக்கொள்ளலாம் என்று மாலன் சொன்னதால் செய்தியாளர்களுக்கும் மேடையில் அமர்ந்து இருந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

நீட் தேர்வு, எட்டுவழிச்சாலை, ஜி.எஸ்.டி, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, ரஃபேல் என அடுக்கடுக்காக கேள்விகள் எழுப்பப்பட்டதால் மாலன் உள்ளிட்ட அனைவரும் பதிலளிக்க முடியாமல் செய்தியாளர் சந்திப்பைப் புறக்கணித்து பாதியிலேயே வெளியேறினர்.


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see:

First published: April 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்