ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

வாயில் பலத்த காயத்துடன் திரிந்த மக்னா யானை கேரள வனப்பகுதியில் பிடிபட்டது..

வாயில் பலத்த காயத்துடன் திரிந்த மக்னா யானை கேரள வனப்பகுதியில் பிடிபட்டது..

மக்னா யானை

மக்னா யானை

யானையின்  வாயில் பலத்த காயம் இருக்கும் நிலையில் காயத்தினை  சுத்தப்படுத்தி அதற்கு மருத்துகள்  போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு  வருகின்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கோவையில் வாயில் காயத்துடன் சுற்றித்திரிந்த மக்னா  யானை கேரளா வனப்பகுதியில் வனத்துறையிடம்  சிக்கியது. மக்னா  யானைக்கு கேரள வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கோவை  மருதமலை வனப்பகுதியில் கடந்த 14-ஆம் தேதி முதல் 30 வயதான மக்னா காட்டு யானை வாயில் பலத்த  காயத்துடன் சாப்பிடமுடியாமல்  சுற்றி திரிந்தது. இந்த காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க, தமிழக வனத்துறையினர் காயமடைந்த  யானையை பின் தொடர்ந்தனர்.

கோவை வனப்பகுதியில் திரிந்த அந்த யானை கேரள வனப்பகுதிக்குள்  சென்றது . இதனையடுத்து கேரள வனத்துறையினர் யானையினை பின் தொடர்ந்தனர். இரு மாநில வனப்பகுதிகளுக்குள்ளும் மாறி மாறி மக்னா  யானை சுற்றி திரிந்த நிலையில் , இன்று கேரள வனப்பகுதியில்  சோலையூர்   என்ற இடத்தில்  மயக்க  ஊசி செலுத்தி மக்னா யானையை  பிடித்தனர்.

பிடிபட்ட மக்னா யானை 

வாயில் காயத்துடன் திரிந்த மக்னா யானை

பிடிபட்ட மக்னா யானைக்கு வனப்பகுதியில் வைத்து கேரள மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.மன்னார்க்காடு மாவட்ட வன அலுவலர் சுனில்குமார் தலைமையில் மக்னா  யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

யானையின்  வாயில் பலத்த காயம் இருக்கும் நிலையில் காயத்தினை  சுத்தப்படுத்தி அதற்கு மருத்துகள்  போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு  வருகின்றது.

Published by:Gunavathy
First published:

Tags: Elephant, Elephant routes, Elephant struggles