தமிழகம் முழுக்க சுமார் 20 லட்சம் பேர் அரசு மருத்துவமனைகளில் நீரிழிவு, ரத்த அழுத்தத்துக்கான மாத்திரைகளை வாங்கி உட்கொண்டு வருகின்றனர். ஊரடங்கு காலத்தில் இவர்களால் அரசு மருத்துவமனைக்கு சென்று மருந்துகளை வாங்க முடிவதில்லை. இதனால் அவர்களுக்கு நீரிழிவும், ரத்த அழுத்தமும் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருப்பதால் கொரோனா தொற்றிலிருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர். பெரும்பாலான மரணங்களும் இதனாலேயே நிகழ்கின்றன.
இவர்களுக்கு தடையில்லா மருந்துகளை வழங்குவதற்காகவே, மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக வீடு தேடி வரும் வாகனத்தில் செவிலியர்கள், பிஸியோதெரபி சிகிச்சையாளர்கள் இருப்பார்கள். 45 வயது மேற்பட்ட நோயாளிகளுக்கு வீடு வீடாக சென்று மருந்துகளை வழங்கிட கிராம சுகாதார செவிலியர்கள், தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டு கழகத்தின் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.
அவர்களுக்கு நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த அளவும் பரிசோதிக்கப்படும். முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இத்திட்டத்தின் மூலம் வீடுகளுக்கே சென்று பிசியோதெரபி சிகிச்சை வழங்கப்படும். சிறுநீரக கோளாறால் அவதிப்படுபவர்களுக்கு வாரத்தில் 2 முறை டயாலிஸிஸ் செய்ய வேண்டியிருப்பதால், அவர்களுக்கு போர்டபிள் மெஷின் மூலம் வீடுகளிலேயே மருத்துவம் செய்யப்படும்.
இதற்கான நோயாளிகளின் பட்டியலை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. நீரிழிவு, ரத்த அழுத்தத்திற்கு தனியார் மருத்துவமனைகளில் மருந்து எடுத்துக்கொள்பவர்களும் இந்த திட்டத்தில் இணையலாம், ஆறு மாத காலத்திற்குள் ஒரு கோடி பேரை சென்றடைவதே மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் இலக்கு.
இதற்காக ஆண்டுக்கு 275 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 1172 துணை சுகாதார மையங்கள், சென்னை, கோவை, நெல்லையில் உள்ள 21 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 1400க்கும் மேற்பட்ட இடங்களில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.