• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 'துரோகம்.. அடையாளம் தெரியாதவர்கள்..' திமுகவில் இணைந்த மகேந்திரன், பத்மபிரியாவை விளாசும் மக்கள் நீதி மய்யம் நிர்வாகி!

'துரோகம்.. அடையாளம் தெரியாதவர்கள்..' திமுகவில் இணைந்த மகேந்திரன், பத்மபிரியாவை விளாசும் மக்கள் நீதி மய்யம் நிர்வாகி!

மகேந்திரன் - பத்மப்பிரியா

மகேந்திரன் - பத்மப்பிரியா

யார் என்று அடையாளம் தெரியாத நிலையில் இருந்தவர்கள், அடையாளத்தைப் பெற்று வியாபாரப் பொருளாக்கி பிற கட்சியில் இணைந்துள்ளனர், இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

  • Share this:
யார் என்று அடையாளம் தெரியாமல் இருந்தவர்கள், மக்கள் நீதி மய்யம் மூலம் அடையாளத்தைப் பெற்று அதனை வியாபாரப் பொருளாக்கி பிற கட்சியில் இணைந்துள்ளனர்  என்று  மக்கள் நீதி மய்யத்தின்  துணைத்தலைவர் மௌரியா தெரிவித்தார்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் சார்பில்  போராட்டம் நடைபெற்றது. மக்கள் நீதி மய்யம் துணைத்தலைவர் மெளரியா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்சியினர் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மையம் துணைத்தலைவர் மெளரியா, “மத்திய மாநில அரசுகளை பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை குறைக்க வலியுறுத்தி போராட்டக் களத்தில் வீதியில் இறங்கி இருக்கிறோம்.
உருமாறிய மக்கள் நீதி மய்யம், மக்கள் இயக்கமாக போராட்டத்தில் இறங்கி இருக்கிறது எனவும் வரி மூலம் கொள்ளை லாபம் சம்பாதித்துக் கொண்டிருக்கும் அரசுகளால் ஏழை எளிய மக்கள் வஞ்சிக்கப்பட்டு உள்ளனர் என்றார்.

Also Read:   ஆன்லைன் வகுப்புக்காக அடர்ந்த வனப்பகுதிக்குள் மாணவர்களின் திகில் பயணம்.. ஒரு ஷாக் ரிப்போர்ட்!

அண்மையில் திமுகவில் பத்மபிரியா மற்றும் மகேந்திரன் இணைந்தது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, துரோகம் என்பதை தலைவர் (கமலஹாசன்) அன்றே குறிப்பிட்டிருந்தார், யார் என்று அடையாளம் தெரியாத நிலையில் இருந்தவர்கள், அடையாளத்தைப் பெற்று வியாபாரப் பொருளாக்கி பிற கட்சியில் இணைந்துள்ளனர், இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தலைவர் கமலஹாசன் அவர்களுக்கு நன்றியுடன் இருக்கட்டும் என்றார். பின்னர் போராட்டத்தின் போது மக்கள் நீதி மய்யம் கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர். அப்பொழுது மக்கள் நீதி மண்ணாய் போவதை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம் என கோஷங்களை எழுப்பினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: